லண்டன், மே.23-
இங்கிலாந்தில் வசித்து வரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தொழில் அதிபர் சுனில் சோப்ரா. டெல்லியை பூர்வீகமாக கொண்ட இவர் லண்டன் சவுத்வார்க் பெருநகரத்தின் மேயராக 2வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
முன்னதாக கடந்த 2013ம் ஆண்டில் சவுத்வார்க் பெருநகரத்தின் துணை மேயராக தேர்வான சுனில் சோப்ரா, பின்னர் 2014ம் ஆண்டில் மேயராக பொறுப்பேற்றார்.
இதன் மூலம் சவுத்வார்க் பெருநகரத்தின் மதிப்புமிக்க பதவியை வகித்த முதல் இந்திய வம்சாவளி நபர் என்ற பெருமையை சுனில் சோப்ரா பெற்றார்.
இந்த நிலையில் இங்கிலாந்தில் அண்மையில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் தொழிலாளர் கட்சியின் சார்பில் மீண்டும் மேயர் பதவிக்கு போட்டியிட்ட சுனில் சோப்ரா அமோக வெற்றிப்பெற்றார். அதை தொடர்ந்து சவுத்வார்க் பெருநகரத்தில் உள்ள தேவலாயத்தில் நடந்த விழாவில் சுனில் சோப்ரா 2வது முறையாக மேயராக பதவியேற்றார்.