செய்திகள்

இங்கிலாந்துக்கு எதிரான 4வது டெஸ்ட்: 2வது இன்னிங்சை சிறப்பாக தொடங்கியது இந்தியா

லண்டன், செப். 4–

இங்கிலாந்து அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியின் 2வது இன்னிங்க்சை இந்தியா சிறப்பான முறையில் தொடங்கியுள்ளது.

இந்தியா- – இங்கிலாந்து இடையேயான 4-வது டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 191 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதையடுத்து, முதல் இன்னிங்சை துவங்கிய இங்கிலாந்து அணி 84 ஓவர்களில் 10 விக்கெட் இழப்புக்கு 290 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து அணி இந்திய அணியைவிட 99 ரன்கள் முன்னிலை பெற்றது.

இதையடுத்து, 2 வது இன்னிங்சை துவங்கிய இந்திய அணி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. விக்கெட்டுகளை இழந்து விடக் கூடாது என்பதில் மிகவும் கவனம் எடுத்து விளையாடிய ரோகித் சர்மாவும், கே.எல் ராகுலும் பொறுப்புடன் விளையாடினர்.

2-ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் 16 ஓவர்கள் நிலவரப்படி இந்தியா விக்கெட் இழப்பின்றி 43 ரன்கள் சேர்த்துள்ளது. ரோகித் சர்மா 20 ரன்களுடனும், கே எல் ராகுல் 22 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்திய அணி, இங்கிலாந்து அணியின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை விட இன்னும் 56 ரன்கள் பின் தங்கியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *