செய்திகள்

இங்­கி­லாந்­தில் உயர்­கல்வி பயிலும் 104 இந்­தி­ய மாண­வி­க­ளுக்கு பிர­தமர் தெரசா மே பாராட்­டு

சென்னை, நவ. 8–

பிரிட்டிஷ் கவுன்சில்,அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் ஆகிய துறைகளில் முதுகலை பட்டப்படிப்பை மேற்கொண்டுவரும் 104 இந்திய மாணவிகளுக்கு இங்­கி­லாந்து பிர­த­மர் தெரசா மே பாராட்டி வழங்கினார்.

இந்த மாணவர்கள், இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, வேல்ஸ் மற்றும் வட அயர்லாந்து ஆகியவற்றிலுள்ள 43 பிரிட்டிஷ் பல்கலைக்கழகங்களில் ஸ்டெம் கல்விப் பிரிவில் தங்களது முதுகலை பட்டப்படிப்பை தற்போது நிறைவுசெய்யவிருக்கின்றனர்.

இங்­கி­லாந்­து ஸ்காலர்ஷிப்களை வென்றிருக்கும் இவர்கள், இங்­கி­லாந்­தின் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் மற்றும் முக்கிய தொழில்நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களோடு தொடர்புடையவர்களையும் சந்தித்தனர். பணியமர்த்தலுக்கான சாத்தியங்களையும் மற்றும் பயிற்சிக்கான இன்டர்ன்ஷிப்களுக்கான வாய்ப்புகளையும் ஆராய்ந்து அறிவது இச்சந்திப்புகளின் நோக்கமாகும்.

பிரிட்டிஷ் கவுன்சிலும் மற்றும் இங்­கி­லாந்­தில் உள்ள உலகின் சிறந்த பல்கலைக்கழகங்களுள் சிலவும், -2–ம் கல்வியாண்டுக்கு இங்கி­லாந்­தில் ஸ்டெம் துறைகளில் முதுகலை பட்டப்படிப்பை மேற்கொள்வதற்கு 70 இந்திய பெண்களுக்கு 1 மில்லியன் பவுண்டு மதிப்புள்ள கல்வி உதவித்தொகையை முழு கல்வி கட்டணங்களுக்காக வழங்கும். உயர் கல்வி பயிலும் மாணவிகள் மீது பிரிட்டிஷ் கவுன்சில் மேற்கொள்ளும் இந்த முதலீடு, பெண்கள் முன்னெடுக்கும் முன்னேற்றம் ஆகும். இது பிரிட்டிஷ் கவுன்சில் கொண்டிருக்கும் சிறப்பு குறிக்கோளுக்கும் ஆதரவளிப்பதாக இருக்கிறது.

பிரிட்டிஷ் கவுன்சிலின் இந்தியாவுக்கான இயக்குநர் ஆலன் ஜெம்மல் பேசுகையில், இங்கிலாந்து பிரதமரை அவரது இல்லமான 10 டவுனிங் சாலையில் சந்தித்தது எமது மேல் பட்டதாரிகளின் மறக்கமுடியாத ஒரு தினமாகும். இந்தியாவுக்கும், பிரிட்டனுக்கும் இடையேயான கல்விசார் உறவின் இன்றியமையா முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டுவதாக இந்த சந்திப்பு அமைந்தது. பிரிட்டிஷ் கவுன்சிலின் 70வது ஆண்டுதின ஸ்காலர்ஷிப்கள் விண்ணப்பிக்கின்ற தேர்வர்கள், அடுத்த ஆண்டு (2019) ஜனவரி 30ம் தேதிக்குள் இங்­கி­லாந்­து பல்கலைக்கழகத்திலிருந்து அங்கு கல்வி பயில்வதற்கான ­அ­னு­மதி பெற்றிருக்க வேண்டும். இது குறித்த அனைத்து விவரங்களும் பிரிட்டிஷ் கவுன்சிலின் வலைதளத்தில் காணக்கிடைக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *