சென்னை, ஏப். 1–
தி.மு.கவைச் சேர்ந்த ஆ.ராசா, சட்டசபை தேர்தலில் 2 நாள் பிரச்சாரம் செய்ய இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.
முதல்வர் எடப்பாடி குறித்த அவரின் விமர்சனத்துக்கு (தரக்குறைவான பேச்சு) ஆ.ராசா அளித்த பதில் திருப்தி அளிக்கவில்லை என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
அதே நேரம் தி.மு.க.வின் நட்சத்திரப் பேச்சாளர் பட்டியலில் இருந்து ஆ.ராசாவின் பெயரை தேர்தல் தேர்தல் ஆணையம் நீக்கியுள்ளது.
முதல்வர் குறித்த விமர்சனத்துக்கு பதிலளிக்குமாறு ஆ.ராசாவுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது. ‘உவமானம்’ என்ற பெயரில் தான் முதல்வர் பற்றி தான் பேசியதாக ஆ.ராசா அளித்த பதில் திருப்தி இல்லை என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.