வாழ்வியல்

ஆஸ்துமா, தைராய்டைக் குணமாக்கும் தூதுவளை கீரை

தூதுவளை என்பது உணவிலும் மருத்துவத்திலும் அதிகம் பயன்படும் மருத்துவ குணங்கள் கொண்ட மூலிகை கொடியாகும். சித்தர்கள் சுட்டிக் காட்டியுள்ள காயகற்ப மூலிகைகளில் இதுவும் ஒன்றாகும். குறிப்பாக இந்தியா முழுவதும் தோட்ட வேலிகளில் வளரும் ஒருவகை கொடியாகும். இது ஈரமான இடங்களில் செழித்துப் புதர் போல வளரும் தன்மை கொண்டது. தூதுவளை அமைப்பு

தூதுவளையின் இலை கரும்பச்சை நிறத்தில் இருக்கும். இதன் பூ ஊதா நிறத்தில் இருக்கும். இதன் கொடியிலும், இலைகளிலும் முட்கள் காணப்படும். சிறிய காய்கள் தோன்றிப் பழுக்கும். இதன் இலை, பூ, காய், பழம், வேர் அனைத்தும் மருத்துவப் பயன் கொண்டது. குறிப்பாக ஆஸ்துமா நோய்க்கு இது மருந்தாகப் பயன்படுகிறது. தூதுவளையானது சயரோகம், பிரைமரி காம்ளக்ஸ், ஆஸ்துமா, டான்சிலிட் டீஸ், தைராய்டு கட்டிகள், வாயில், கன்னத்தில் ஏற்படும் கட்டிகளுக்கும் காதில் ஏற்படும் எழுச்சிக் கட்டிக்கும் சிறந்த நிவாரணமாக திகழ்கிறது. தூதுவளை சளியைக் கரைக்கும் தன்மைக்கு முதலிடம் பெறுகிறது. தைராய்டு கட்டிகள் தோன்றியவுடன் தூதுவளையைப் பயன்படுத்தினால் நிரந்தரத் தீர்வு கிடைக்கும். கண் நோய்கள் தீரும்

தூதுவளை காயை சமைத்தோ, அல்லது வற்றல், ஊறுகாய் போலோ செய்து ஒரு மண்டலம் கற்ப முறைப்படி சாப்பிட்டு வந்தால் கண்ணில் உண்டான பித்த நீர் அதிகரிப்பு, கண் நோய் போன்ற அனைத்துப் பிரச்சனைகளுமே நீங்கும்.தூதுவளை நல்ல செரிமானத்தை அளிக்கக் கூடியது. எனவே அஜீரண கோளாறு உள்ளவர்கள் அடிக்கடி தூதுவளையை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published.