வாழ்வியல்

ஆஸ்துமாவைக் குணமாக்கும் பலா

ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டோர் பலா பழ மரத்தின் வேரை வேக வைத்து அந்த நீரோடு, பலாப்பழச் சாற்றைக் கலந்து குடித்தால் நுரையீரலில் ஏற்படும் ஆஸ்துமா குணமாகும். பலாப் பழத்தில் உள்ள விட்டமின் ‘ஏ’ சத்து, பார்வைக் குறைபாடு வராமல் தடுக்கிறது. மாலைக் கண் நோயையும் அது குணமாக்குகிறது.

தொடர்ச்சியாக பலாச்சுளை சாப்பிடுவோருக்கு கண் நோய்கள் வராது என்கிறது ஒரு ஆய்வு.

நார்ச்சத்து அதிகம் உள்ள பழம் என்றால் அது பலாப்பழமே. மேலும் இது அல்சர், செரிமானக் கோளாறு, கண்களில் ஏற்படும் கோளாறு ஆகியவற்றைக் குணப்படுத்தும் தன்மை உடையது. இதில் கலோரி குறைவாக இருப்பதால் இதய நோய் இருப்பவர்களுக்கு இது சிறந்த மருத்துவ குணம் வாய்ந்த பழமாக அமைகிறது. நெய் அல்லது தேன் கலந்த பலாப் பலத்தைச் சாப்பிட்டால் இதயம், மூளை வளர்ச்சியடையும். நரம்புகளும் வலுப்படும். உடலும் ஊட்டம் பெறும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *