செய்திகள்

ஆவின் பால் விலை குறைப்பு பட்டியல் வெளியீடு

சென்னை, மே 9–

ஆவின் பால் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூ.3 குறைக்கப்பட்டுள்ள நிலையில், அதன் விலை பட்டியலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றபின் 5 முக்கிய அரசாணைகள் பிறப்பித்துள்ளார். அதில் இரண்டாதவதாக பொது மக்கள் நலன் கருதி ஆவின் பால் விலையை லிட்டர் ஒன்றுக்கு மூன்று ரூபாய் வீதம் 16.5.2021 முதல் குறைத்து விற்பனை செய்ய முதலமைச்சர் அரசாணை பிறப்பித்துள்ளார்.

சில்லறை விற்பனை

இந்த அரசாணைக்கு ஏற்ப பொதுமக்கள் ஆவின் பார்லர்கள் மற்றும் சில்லறை விற்பனை கடைகளில் நேரடியாக 16.5.2021 முதல் ஆவின் பால் லிட்டர் ஒன்றுக்கு 3 ரூபாய் குறைத்து பெற்றுக்கொள்ளலாம்.

கீழ்கண்ட விலை பட்டியல் 16–ந்தேதி முதல் அமலுக்கு வருகின்றது.

அதன்படி குறைக்கப்பட்ட ‘ஆவின்’ பால் விலை குறித்த முழு விவரம் வருமாறு:–

பால் அட்டை விற்பனை

சென்னையில் பிரதி மாதம் 1ம் தேதி முதல் 15ம் தேதி வரை பால் அட்டை 27 வட்டார அலுவலகங்கள் மற்றும் நுகர்வோர் கூட்டுறவு சங்கங்கள் மூலமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதற்கு உண்டான பால் அட்டைதாரருக்கு 16ம் தேதி முதல் அடுத்த மாதம் 1ம் தேதி வரை வழங்கப்படும்

16–ந்தேதி முதல் கீழ்கண்ட பால் அட்டை விலை குறைப்பு பட்டியல் அமலுக்கு வருகிறது.

எனவே நுகர்வோர்களுக்கு இதுவரை விற்பனை செய்யப்பட்டுள்ள பால் அட்டைகளுக்கு உண்டான வித்தியாச தொகை அடுத்த மாதம் பால் அட்டை விற்பனை செய்யும் போது ஈடு செய்யப்படும்.

பொது மக்களுக்கு பால் விநியோகம் தங்கு தடையின்றி நடைபெறுவதை கண்காணிக்க 24 மணி நேர வாடிக்கையாளர் சேவை மையம் ஆவின் தலைமை அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

ஆவின் பால் விநியோகம் பற்றிய தகவல்களுக்கு சென்னையை பொறுத்தவரை பொது மக்கள் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள்: 1800 425 3300, 044–23464575, 23464576, 23464578 மேலும் பிற மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றிய பொது மேலாளர்களை தொடர்பு கொள்ளும்படி ஆவின் நிர்வாகம் தெரிவித்துக்கொள்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *