செய்திகள்

ஆவடி தொகுதி மக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க 100 இடங்களில் ‘‘குடிநீர் ஏ.டி.எம்.”

ஆவடியிலிருந்து ஸ்ரீபெரும்புதூருக்கு புதிய ரெயில் வழித்தடம்

ஆவடி தொகுதி மக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க 100 இடங்களில் ‘‘குடிநீர் ஏ.டி.எம்.”

அமைச்சர் க.பாண்டியராஜன் வாக்குறுதி

சென்னை, மார்ச், 26–

ஆவடியிலிருந்து ஸ்ரீபெரும்புதூருக்கு புதிய ரெயில் வழித்தடம் அமைக்க முயற்சி மேற்கொள்ளப்படும், ஆவடி தொகுதி மக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க 100 இடங்களில் ‘குடிநீர் ஏடிஎம்’ அமைக்கப்படும் என்று அண்ணா தி.மு.க. வேட்பாளர், அமைச்சர் க. பாண்டியராஜன் வாக்குறுதி வழங்கி பிரச்சாரம் செய்தார்.

ஆவடி தொகுதி அண்ணா தி.மு.க. வேட்பாளரும், அமைச்சருமான க. பாண்டியராஜன் காமராஜன் பகுதியில் உள்ள காமராஜர் நகர் 4-வது தெரு, ஐயப்பன் நகர், சாய்பாபா கோயில், பிள்ளையார் கோயில், கருணாநிதி 2வது தெரு, வள்ளலார் தெரு, பவானி அம்மன் தெரு, அருணகிரிநாதர் தெரு, திருவள்ளுவர் நகர் ஆகிய இடங்களில் பிரச்சாரம் செய்தார்.அந்தந்த பகுதியில் கூடிருந்த மக்களிடம் அவர் பேசியதாவது:

100 கோடி மதிப்பீட்டில் குடியிருப்பு பகுதிகளில் வெள்ள நீர் புகாமல் இருப்பதற்கும் நிலத்தடி நீர் ஆதாரத்தை பெருக்கவும் ஆவடியில் உள்ள முக்கிய 6 ஏரிகளை இணைத்து தொகுதி நீர் வளம் பாதுகாக்கப்படும். ஆவடி சட்டமன்ற தொகுதியில் 100 இடங்களில் தனியார் பங்களிப்புடன் குடிநீர் ஏடிஎம்-கள் அமைத்து சுத்திகரிக்கப்பட்ட நீர் வழங்கப்படும். ஆவடி தொகுதியில் உள்ள கோயில் குளங்கள் மற்றும் சிறு குளங்கள் தூர்வாரி நிலத்தடி நீர் சேகரிக்கும் ஆதாரமாக உருமாற்றப்படும். ஆவடியில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் செல்வதற்கு புதிய ரெயில் வழித்தடம் அமைக்க முயற்சி மேற்கொள்ளப்படும்.

ஆவடி சட்டமன்ற தொகுதியில் தனியாக காவல் போக்குவரத்து பிரிவு ஏற்படுத்தப்படும். ஆவடி சட்டமன்ற தொகுதி முழுவதும் மின்வழித்தடங்கள் படிப்படியாக பூமிக்கு அடியில் கொண்டு செல்ல முயற்சிகள் மேற்கொள்ளப்படும். ஆவடி மாநகரின் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு 10 இடங்களில் -இ–பைக் வசதி செய்து தரப்படும். ஆவடி மக்களின் குறைகளை உடனடியாக நிவர்த்திசெய்ய “My Avadi–App” நவீனப்படுத்தப்பட்டு, சீராக இயங்கிட வழிவகை செய்யப்படும். தொகுதி பொது மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடுவது உறுதி செய்யப்படும். தொகுதியில் 6 இடங்களில் 24 மணிநேரமும் இயங்கக்கூடிய அரசு மற்றும் தனியார் சேவைகளை பெறுவதற்கு இணைய வழி சேவை மையங்கள் மக்கள் பயன்பாட்டிற்காக அமைத்துத் தரப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த பிரச்சாரத்தின்போது காமராஜர் நகர் பகுதி செயலாளர் தீனதயாளன், வட்ட செயலாளர்கள் குப்பன், கேபிள் ஆனந்த், வள்ளி சண்முகம் மற்றும் கூட்டணி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உடன் சென்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *