செய்திகள்

ஆவடி தொகுதியில் அமைச்சர் பாண்டியராஜன் வாக்கு சேகரித்தார்

ஆவடி, மார்ச் 12

ஆவடி தொகுதியில் போட்டியிடம் அமைச்சர் க.பாண்டியராஜன் பிரச்சாரத்தை தொடங்கினார்.

அண்ணா தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளரும், அமைச்சருமான க. பாண்டியராஜன் திருமுல்லைவாயலில் உள்ள பச்சையம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்து தனது பிரச்சாரத்தை துவக்கினார். பின்னர் திருநின்றவூர், திருவேற்காடு, கோவில்பதாகை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கோவில், தர்கா, தேவாலயங்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.

அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள், வியாபாரிகளை நேரில் சந்தித்து அண்ணா தி.மு.க. அரசு செய்த சாதனைகளை விளக்கும் துண்டுபிரசுரங்களை வழங்கி வாக்குகள் சேகரித்தார். அப்போது அவர் பேசுகையில், அண்ணா தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. இல்லாததால், மேலும் 15 அண்ணா தி.மு.க.வினர் போட்டியிட வாய்ப்பு கிடைத்துள்ளது. இது அண்ணா தி.மு.க.வினரின் ஆசையை ஓரளவுக்கு ஈடுசெய்யும். ஜெயலலிதா, கடந்த முறை 234 தொகுதிகளிலும் அண்ணா தி.மு.க.வை போட்டியிட செய்து இரட்டை இலையை மலரச் செய்தார். எங்கள் கூட்டணி 185 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற தொண்டர்கள் மத்தியில் ஒரு எழுச்சியை ஏற்படுத்தி இருப்பதாக நம்புகிறேன் என்று கூறினார்.

தேர்தல் பிரச்சாரத்தின் போது முன்னாள் அமைச்சர் எஸ்.அப்துல் ரஹீம், நகர செயலாளர் தீனதயாளன், கிழக்கு பகுதி கழக செயலாளர் முல்லை தயாளன், பகுதி அவைத் தலைவர் முல்லை ஞானம், வழக்கறிஞர் பிரிவு மாவட்ட செயலாளர் அரிவரசன், மாவட்ட பிரதிநிதி முல்லை ஞானி, பகுதி கழக துணைச் செயலாளர் கனிமொழி ஜெய்சந்தர், மாவட்ட கழக பொருளாளர் காமராஜ் நகர் ரவி, பகுதி கழக செயலாளர்கள் தீனதயாளன், ஆவடி சங்கர், பிரகாஷ், பாரதீய ஜனதா கட்சியைச் சேர்ந்த ஆவடி கிழக்கு மாவட்ட செயலாளர் அஸ்வின்குமார், ஆவடி நகரத் தலைவர் வடிவேல், ஆவடி நகர பொதுச் செயலாளர் அனில்குமார், ஆவடி நகரச் செயலாளர்கள் சந்தோஷ் குமார், கமலநாதன் ஆகியோர் உடன் சென்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *