செய்திகள்

ஆவடியில் மகளிர் தின மாரத்தான் ஓட்டப் பந்தயம்

Makkal Kural Official

ஆவடி மாநகர காவல்துறை சார்பில்

பெண்களின் பாதுகாப்பு விழிப்புணர்வு மாரத்தான்
ஓட்டம்: கமிஷனர் சங்கர் துவக்கி வைத்தார்

ஆவடி, மார்ச் 9–

ஆவடி மாநகர காவல்துறை சார்பாக உலக மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்களின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டப் பந்தயத்தை ஆவடி மாநகர காவல்துறை கமிஷனர் கி. சங்கர் துவக்கி வைத்தார்.

தமிழ்நாடு அரசு பெண்களின் பாதுகாப்பை முக்கிய குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக ஆவடி மாநகர காவல்துறை கமிஷனர் கி.சங்கர் அறிவுறத்தலின்படி உலக மகளிர் தினத்தை முன்னிட்டு காவல் உதவி செயலி மற்றும் மகளிர் உதவி எண். 181 குறித்த விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டப்பந்தயம் இன்று காலை 7 மணி அளவில் திருமுல்லைவாயல் எஸ்.எம். நகர் போலீஸ் கன்பென்சன் சென்டர் அருகில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் கமிஷனர் கி.சங்கர் கலந்து கொண்டு மாரத்தான் ஓட்டப் பந்தயத்தை துவக்கி வைத்து மகளிர் உதவி எண். 181 குறித்து கல்லூரி மாணவிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினார். மாரத்தான் ஓட்டப் பந்தயத்தில் கல்லூரி மாணவிகள் 1500 பேர் கலந்து கொண்டனர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசாக ரூ. 5 ஆயிரம், 2வது பரிசாக ரூ. 4 ஆயிரம், 3வது பரிசாக ரூ. 3 ஆயிரம் மற்றும் முதல் 30 இடங்களை பிடித்த மாணவிகளுக்கு ரொக்கப் பணமும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் கூடுதல் கமிஷனர் பவானீஸ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *