ஏற்றுமதி இறக்குமதி செய்யும் ஒரு நிறுவனத்தில் ஆட்கள் வருவதும் போதுமாக இருந்தார்கள்.அந்த நிறுவனத்தின் முதலாளி ரொம்ப கோபக்கார பேர்வழி .தொழிலில் அவ்வளவு நேர்த்தி . யார் எது சொன்னாலும் பணம் , தொழில் இரண்டைத் தவிர அவர் உதடுகள் வேறு வார்த்தையை உச்சரிக்காது. இதனால் அவரைப் பார்ப்பதும் பேசுவதும் வியாபாரமாக மட்டுமே இருக்குமே ஒழிய அன்பைப் பற்றியோ பாசத்தைப் பற்றியோ சிறிதும் இருக்காது. அப்படி இருக்கும் அந்த மனிதரின் தொழில் பக்தியைப் பார்த்து சிலர் மெச்சிப் போவார்கள் .சிலர் உச்சுக் கொட்டுவார்கள். இப்படி இருக்கக் கூடாது என்றும் சிலர் சொல்வார்கள். ஆனால் அந்த நிறுவன முதலாளிக்கு நேர்மையும் உண்மையும் ஒரு சேர இருந்தது. அதனால் அவரை யாரும் ஏமாற்ற முடியாது .அவரும் ஏமாற மாட்டார் என்று சொல்வார்கள் அவரைப் பற்றித் தெரிந்தவர்கள் .
ஒரு நாள் நிறுவனத்திற்கு வந்த ஒருவர், முதலாளியைச் சந்திக்க வேண்டும் என்று சொன்னார். ஆனால் வந்த நபர் கொஞ்சம் ஏடாகூடமாக இருப்பதைத் தெரிந்து கொண்ட ஒரு ஊழியர் அவரை மேலும் கீழும் பார்த்துவிட்டு
” முதலாளி உள்ளே இருக்கிறாரு போய்ப் பாருங்க”
என்றார்.
” என்ன இது? முதலாளிய பாக்குறதுக்கு அவ்வளவு பெரிய சிக்கலா ? நாம என்ன அவர் கூட செல்பியா எடுக்கப் பாேறாேம். இவ்வளவு சலிச்சுக்கிறானுக “
என்று யாேசித்த அந்த நபர் புலம்பிக் காெண்டே நிறுவனத்திற்குள் நுழைந்தார்.
எதிரே வந்து கொண்டிருந்த முதலாளியைப் பார்த்து
“நான் முதலாளிய பாக்கணும் “
என்று வந்தவர் சொல்ல
” தான் முதலாளி இல்ல “
என்பதை மறைத்து
” அவர் இன்னும் வரல. நாளைக்கு தான் வருவார் “
என்று வந்தவரிடமே பதில் சொன்னார் முதலாளி.
” நாளைக்கு எத்தனை மணிக்கு வரட்டும் “
என்று வந்தவர் கேட்க
“ஒரு பத்து மணிக்கு வாங்க “
என்று சொல்லி அனுப்பினார் முதலாளி
வந்தவர் குழம்பிப் போய்
” இன்னைக்குத் தான சொன்னாங்க. இவர் நாளைக்கு சொல்றார். சார் நீங்க யாரு சார் என்று கேட்பதற்குள் முதலாளி உள்ளே நுழைந்தார் .
அந்த அலுவலகத்தை விட்டு வெளியே வந்த அந்த நபர்.
” நாளைக்கு என்ன சொல்லப் பாேறாங்களாே ?
என்று புலம்பியபடியே அலுவலகத்தை விட்டு வெளியேறினார்.
மறுநாள் அதே நபர் அந்த அலுவலகத்திற்கு வந்தார்.
” நான் முதலாளிய சந்திக்கணும் “
என்று சொன்னார்
“நேத்து நீங்க பாக்கலையா?
என்று ஒருவர் கேட்க
” இல்ல யாரோ ஒருத்தர் நாளைக்கு தான் வருவார்ன்னு ஒருத்தர் சொன்னார் “
என்று வந்தவர் சொல்ல
” ஓ ! அப்படியா. சரி இன்னைக்கு வேணா போய்ப் பாருங்க “
என்று அந்த ஊழியர் உள்ளே அனுப்பினார். உள்ளே சென்ற அந்த நபர்
நேற்றுப் பார்த்த அதே முதலாளியைப் பார்த்தார்.
” வாங்க ” என்று கூப்பிட்டார் முதலாளி.
” சார் நான் முதலாளிய பாக்கணும் “
என்று அவர் சொல்ல
“நான் தான் முதலாளி “
என்றார் அந்த நபர் .
இதைக் கேட்டுப் பதறிய அந்த நபர்.
” நான் முதலாளி இல்ல. அவர் வெளியே போயிருக்கிறாருன்னு நேத்து நீங்க தான சொன்னீங்க “
என்று வந்தவர் கேட்க
“ஆமா, நேத்து நீங்க என்கிட்ட டொனேசன் கேட்டு வந்தீங்க. அதனால நான் முதலாளி இல்லன்னு சொன்னேன். இன்னைக்கு நீங்க தொழில் ரீதியாக வந்து இருக்கீங்கன்னு உங்க முதலாளி சொன்னாரு. நேத்து நான் பேசியிருந்தா எனக்கு நஷ்டம். இன்னைக்கு உங்க கூடப் பேசுறது லாபம் . பணத்த குடுங்க. பொருள எடுத்திட்டு பாேங்க”
என்று முதலாளி சொல்ல, இப்படியும் ஒரு மனிதனா ? என்று கிறுகிறுத்துப் போய் வாய் பிளந்து நின்றான் வந்தவன்.
#சிறுகதை