வர்த்தகம்

ஆலிம்‌ முகம்மது சாலிஹ்‌ அகாடமி ஆர்கிடெக்சர்‌ கல்லூரி ஆன்லைனில் நடத்திய ‘கனவு இல்லம்’ ஓவிய போட்டி

ஆலிம்‌ முகம்மது சாலிஹ்‌ அகாடமி ஆர்கிடெக்சர்‌ கல்லூரி ஆன்லைனில் நடத்திய ‘கனவு இல்லம்’ ஓவிய போட்டி

வெற்றி பெற்றவர்களுக்கு ரூ. 20,000 ரொக்கப் பரிசு

சென்னை, செப்.15

ஆலிம்‌ முகம்மது சாலிஹ்‌ அகாடமி ஆஃப்‌ ஆர்கிடெக்சர்‌ கல்லூரி , நிறுவனர்‌ அல்ஹஜ்‌ டாக்டர்‌ எஸ்‌. எம்‌. ஷேக்‌ நூருதீன்‌ நினைவாக மாணவர்களுக்கிடையே ஆன்லைன்‌ ஓவிய போட்டியை நடத்தியது. நிறுவனர்‌ தினத்தை முன்னிட்டு நடைபெற்ற போட்டியில்‌ வெற்றி பெற்றவர்களுக்கு ரூ. 20 ஆயிரம் பரிசு வழங்கும்‌ விழா, கல்லூரி வளாகத்தில்‌ நடைபெற்றது.

இப்போட்டி, 14 முதல்‌ 18 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கு ஓவிய கலையை ஊக்குவிக்கும் பொருட்டு நடைபெற்றது. போட்டியாளர்கள்‌,”எனது கனவு இல்லம்‌” என்ற தலைப்பில்‌ தங்கள்‌ ஓவியங்களை ஆன்லைன்‌ மூலமாக அனுப்பினார்கள்‌. அவற்றில்‌ சிறந்த ஓவியங்களுக்கு பரிசு, -சான்றிதழ்கள்‌ வழங்கப்பட்டன.

இவ்விழாக்கு தலைமை விருந்தினராக இக்கல்லூரியின் செயலாளர்‌ மற்றும்‌ தாளாளர்‌, எஸ்‌. சேகுஜமாலுதீன்‌, கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளித்து வாழ்த்துரை வழங்கினார்‌. பேராசிரியர்‌ ஏ.ஆர்‌. கிரிராஜன்‌ ஆறுமுகம் கலந்து கொண்டு சிறப்பித்தார்‌.

போட்டியில்‌ முதல்‌ பரிசு வென்ற வேளச்சேரி டிஏவி பப்ளிக்‌ ஸ்கூல்‌, பள்ளி மாணவன் எஸ்‌.கே. விஷ்வேஸ்வரனுக்கு ரூ. 10,000 பரிசு வழங்கப்பட்டது. 2ம்‌ பரிசு அபானிக்கு ரூ. 5,000 வழங்கப்பட்டது.

3ம்‌ பரிசு அண்ணா நகரை சேர்ந்த எஸ்பிஓஏ ஸ்கூல்‌ எஸ்‌.ஷிரேன்‌க்கு ரூ.3,000 வழங்கப்பட்டது. சிறப்பு பரிசுகளை அண்ணா நகர்‌ எஸ்பிஓஏ பள்ளி, மாணவி கே. எம்‌. வினிஷா, வேளச்சேரி டி.ஏ.வி. பப்ளிக் பள்ளி மாணவி ரெக்ஷிதாவுக்கு தலா ரூ. 1,000 வழங்கப்பட்டது. மேலும்‌ 50 சிறந்த ஓவியங்களுக்கு, சான்றிதழ்கள்‌ வழங்கப்பட்டன.

இளம் சந்ததிக்கு கல்வி…

நிகழ்ச்சியில்‌ பேசிய செயலாளர், தாளாளர் எஸ்‌.சேகு ஜமாலுதின்‌, ‘‘இப்போட்டியானது எங்கள்‌ நிறுவனர்‌ எஸ்‌.எம்‌ ஷேக்நூருதீனை பெருமை படுத்தும்‌ விதமாக நாங்கள்‌ நடத்துகிறோம்‌. அவர்‌, நாட்டில்‌ உள்ள அனைத்து தரப்பட்ட மக்களுக்கும்‌ குறிப்பாக இளம்‌ சந்ததியினருக்கும்‌ கல்வியை ஊக்குவித்தார்‌. அதன்‌ மூலமாக அவர்கள் வேலைவாய்ப்பினையும்‌ சமுதாயத்தில்‌ மேன்மையடையவும்‌ பெரிதும் பாடுபட்டார்‌. மேலும்‌ முழு அடைப்பு நிகழும்‌ காலத்திலும்‌ அதிக அளவிலான மாணவர்கள்‌ இந்த ஓவிய போட்டியில்‌ பங்குபெற்று தங்கள்‌ திறமையினை வெளிப்படுத்தி யுள்ளனர்‌. இப்போட்டி யில்‌ வெற்றிபெற்ற, கலந்து கொண்ட மாணவர்களுக்கு எனது பாராட்டுக்கள்‌. மேலும்‌, இந்த ஓவிய போட்டியினை சிறப்பாக நடத்திய இக்கல்லூரிக்கு எனது பாராட்டுக்கள்‌” என்றார். இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி துறை தலைவர்கள்‌, பேராசிரியர்கள்‌, மாணவர்கள்‌, போட்டியில்‌ கலந்து கொண்டவர்கள்‌ மற்றும்‌ அவர்களின்‌ பெற்றோர்கள்‌ கலந்து கொண்டனர்‌.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *