ராணிப்பேட்டை, செப். 19
உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாமில் ஆற்காடு வட்டத்தில் திட்டப் பணிகளை கலெக்டர் ஜெ.யு . சந்திரகலா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் ஜெ.யு. சந்திரகலா, உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாமில் ஆற்காடு வட்டம் ஆற்காடு நகராட்சியில் அமைந்துள்ள உழவர் சந்தையில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். காவனூர் ஊராட்சியில் மகாத்மாக காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் கரடிமலை கோடைக்கால்வாய் 100 நாள் வேலை பெண்கள் மூலம் தூர்வாரப்படும் பணிகள் நடைபெற்று வருவதை பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள். அங்கிருந்த நியாய விலை கடையில் உணவு பொருட்கள் இருப்பளவு, தரம் குறித்து பார்வையிட்டு ஆய்வு செய்து சரியாக உள்ளதா? என்பதை உறுதிப்படுத்தினார்கள். எக்காரணம் கொண்டும் உணவு பொருட்கள் பற்றாக்குறை எடை பிரச்சனைகள் இருந்தால் அபராதம் செலுத்த நேரிடும், ஆகவே தொடர்ந்து இதேபோன்று எவ்வித பிரச்சினைகளின்றி பணியாற்ற வேண்டுமென பணியாளரை கேட்டுக் கொண்டார்கள். திமிரி வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்தில் பார்வையிட்டு அங்கு வருகை தந்துள்ள கர்ப்பிணி தாய்மார்கள், நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் முறையாக உள்ளதா என கலந்துரையாடினார். முப்பதுவெட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மதிய சத்துணவு திட்டத்தில் மாணவ மாணவிகளுக்கு மதிய சத்துணவு முட்டையுடன் வழங்கப்பட்டதை பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள். அருகில் இருந்த கால்நடை மருந்தகத்தில் சென்று அங்கு தேசிய நோய் தடுப்பு திட்டத்தின் கீழ் கருச் சிதைவு நோய் தடுப்பூசி முகாம் நடைபெற்று வருவதை பார்வையிட்டார்.
ஆற்காடு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஆய்வு செய்து திட்ட பணிகளின் முன்னேற்றங்கள் குறித்து அலுவலர்களுடன் உரையாடினார்கள். மேலும் வளர்ச்சி திட்ட பணிகள் நிலுவைகளை விரைவாக மேற்கொள்ள உத்தரவிட்டார்.
இந்த ஆய்வுகளில் மாமாவட்ட வருவாய் அலுவலர் ந. சுரேஷ், திட்ட இயக்குனர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை பா. ஜெயசுதா, வருவாய் கோட்டாட்சியர் ராஜராஜன், மாவட்ட வழங்கல் அலுவலர் ஏகாம்பரம் நகரமன்ற தலைவர்கள் தேவி பென்ஸ் பாண்டியன், மாவட்ட சுகாதார அலுவலர் மரு. செந்தில்குமார், வட்டார மருத்துவ அலுவலர் மரு. மாரிராஜா, உதவி இயக்குனர் தணிக்கை பாரி, உதவி திட்ட அலுவலர் முத்துக்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பிரபாகரன், திரு. சிவபிரகாசம், சைபுதீன், மேல்விஷாரம் நேஷனல் வெல்பேர் அசோசியேசன் செயலாளர் அயூப் வட்டாட்சியர்கள் பாக்கியலட்சுமி, நடராஜன், நகராட்சி ஆணையாளர் வெங்கடா லட்சுமணன், நகராட்சி பொறியாளர் (பொறுப்பு) பரமராசு, ஊராட்சி மன்றத் தலைவர் சரவணன் மற்றும் துறைச்சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.