சினிமா

ஆர்.பி. சவுத்ரியின் 90 வது படம் “களத்தில் சந்திப்போம்”: என்.ராஜசேகர் இயக்கம்; ஜீவா – அருள்நிதி ஹீரோக்கள்!

ஆர்.பி. சவுத்ரியின் சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிக்கும் 90 வது படம் “களத்தில் சந்திப்போம்”. ஜீவா – அருள்நிதி இணைந்து நடிக்க. என்.ராஜசேகர் இயக்குகிறார்.

1990ஆம் ஆண்டு புது வசந்தம் படத்தின் மூலம் தயாரிப்பு துறையில் கால் பதித்தது ஆர்.பி.சௌத்ரியின் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளில் பல வெற்றி படங்களை தயாரித்ததுடன் இன்று முன்னணியிலுள்ள பல நடிகர் நடிகைகள் இயக்குனர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களை அறிமுகப்படுத்திய நிறுவனம் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் .

இந்நிறுவனம் அடுத்ததாக தங்களுடைய 90வது படமாக மிக பிரமாண்டமான முறையில் தயாரிக்கும் படம் தான் களத்தில் சந்திப்போம். ஜீவா, அருள்நிதி இருவரும் கதாநாயகர்களாக நடிக்கிறார்கள். முதன் முறையாக இருவரும் இணைந்து நடிக்கிறார்கள். கதாநாயகிகளாக மஞ்சிமா மோகன், பிரியா பவானி சங்கர் நடிக்க காரைக்குடி செட்டியாராக “அப்பச்சி” என்ற வித்யாசமான வேடத்தில் ராதாரவி நடிக்கிறார். இவர்களுடன் ரோபோசங்கர், பால சரவணன் நகைசுவை வேடத்திலும் இளவரசு, ஆடுகளம் நரேன், மாரிமுத்து, வேலராமமூர்த்தி ரேணுகா, ஸ்ரீரஞ்சனி, பூலோகம் ராஜேஷ், பெனிடோ ஆகியோர் முக்கிய வேடத்திலும் நடிக்கிறார்கள்.

இவர்களுடன் பிசாசு பட புகழ் பிரக்யா மார்ட்டின் கௌரவ வேடத்தில் தோன்றுகிறார்.

கதை திரைக்கதை- எழுத்து -இயக்கம் : என்.ராஜசேகர், வசனம் :- ஆர் .அசோக், இசை :- யுவன் சங்கர் ராஜா, பாடல்கள் :- பா. விஜய், விவேகா, ஒளிப்பதிவு :- அபிநந்தன் ராமானுஜம், படத்தொகுப்பு :- தினேஷ் பொன்ராஜ், கலை :- எம். முருகன், நடனம் :- ராஜு சுந்தரம், சண்டை பயிற்சி :- பிரதீப். – இவர் பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் தளபதி தினேஷின் மகன் ஆவார். நிர்வாக தயாரிப்பு :- ஸ்ரீநாத் ராஜா மணி, தயாரிப்பு, மேற்பார்வை: – புதுக்கோட்டை எம். நாகு, ஆர்.ரமேஷ், மக்கள் தொடர்பு :- ரியாஸ் கே அஹ்மத்.

“களத்தில் சந்திப்போம்” படம் இரண்டு நண்பர்களுக்குள் உள்ள நட்பை மையமாக வைத்து அதிரடி ஆக்சன் கமர்சியல் படமாக உருவாகியுள்ளது. நட்பு, காதல், நகைச்சுவை, அதிரடி என அனைத்து அம்சங்களும் நிறைந்த ஜனரஞ்சக படம் இது. இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, தென்காசி, காரைக்குடி போன்ற இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *