சினிமா

ஆர். பார்த்திபன் வழியில் ஒரே ஷாட்டில் 8 மணி நேரத்தில் முழுப் படமும் எடுத்து முடித்த இளைஞர் பட்டாளம்

சென்னை, செப்.23–

புதுமைப்பித்தன், சரித்திர சாதனையாளன் என்று பெயர் பெற்று வரும் இயக்குனர் ஆர்.பார்த்திபன் வழியில் அஜு கழுமலா என்னும் இளைஞர் நடந்திருக்கிறார். இவர் இயக்கி இருக்கும் படம் ட்ராமா. மொத்தம் 180 நாட்கள் ஒத்திகை மேல் ஒத்திகை பார்த்து எட்டு மணி நேரத்தில் முழுப் படத்தையும் முடித்திருக்கிறார்.

ஒரு காவல் நிலையத்தில் நடக்கும் கதை மின்வெட்டு திடீரென்று ஏற்படும் நிலையில் அங்கே ஒரு கொலை விழுந்து விடுகிறது. ஏன் நடந்தது, அதை செய்தது யார்? என்பது தான் இதன் பின்னணி.

ருசிகரமாக திரைக்கதையை நகர்த்தி இருக்கும் இப்படத்தில் ஜெய்பாலா நாயகன். சப்இன்ஸ்பெக்டர் வேடம். 12 பேர் இருக்கும் அந்த போலீஸ் நிலையத்தில் கொலை செய்தது யார் என்பதை கண்டுபிடிக்கும் உயர் அதிகாரியாக கிஷோர் நடித்திருக்கிறார் கதாநாயகி காவியா , மதுரைப் பெண்.

காவல் நிலையத்தை நிர்மாணித்து, அதில் முழுப்படத்தையும் முடித்து நினைத்த கனவை நனவாக்கி இருக்கிறார் அஜு கழுமலா.

ஒரே நாளில் நடந்து முடியும் கதை. ஒளிப்பதிவாளர் சினோஸ். 1 மணி 53 நிமிடத்தில் முழுப் படப்பிடிப்பையும் முடித்திருக்கிறார்கள்.

சசிகலா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் படம். இதில் சார்லி, வின்சன்ட் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.