செய்திகள்

ஆர்.கே.நகர் தொகுதி விசைப்படகு மீனவர்கள் நல சங்க நிர்வாகிகளிடம் ஆதரவு திரட்டினார் அண்ணா தி.மு.க. வேட்பாளர் ஆர்.எஸ். ராஜேஷ்

சென்னை, மார்ச் 12

ஆர்.கே.நகர் பகுதி விசைப்படகு மீனவர்கள் நல சங்க நிர்வாகிகளை நேரில் சந்தித்து இரட்டை இலைக்கு ஆதரவு திரட்டினார் அண்ணா தி.மு.க வேட்பாளர் ஆர்.எஸ். ராஜேஷ்.

ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதி அண்ணா தி.மு.க. வேட்பாளரும், வடசென்னை வடக்கு கிழக்கு மாவட்ட செயலாளருமான ஆர்.எஸ். ராஜேஷ் இன்று ஆர்.கே.நகர் தொகுதிக்கு உட்பட்ட சென்னை திருவள்ளுவர் காஞ்சிபுரம் மாவட்டம் விசைப்படகு மீனவர்கள் நல சங்க நிர்வாகிகளை நேரில் சந்தித்து இரட்டை இலை சின்னத்திற்க்கு ஆதரவு திரட்டினார்.

அப்போது மீனவ சங்க நிர்வாகிகளிடம் ஆர்.எஸ். ராஜேஷ் பேசுகையில், கொரோனா காலத்தில் மீனவர்களின் வாழ்வாதாரம் கருதி ஆயிரக்கணக்கான மீனவ குடும்பங்களுக்கு அத்தியாவசிய நிவாரண பொருட்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன, மேலும் மாவட்ட கழகத்தின் சார்பில் மீன் விற்பனை அங்காடி, மற்றும் கடற்கரை பகுதியில் நாள் முழுவதும் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டது. மேலும் ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதியில் கழகத்தின் சார்பில் போட்டியிடும் தமக்கு மீனவ சங்க அமைப்புகள் முழு ஆதரவு தந்து இரட்டை இலை சின்னத்திற்க்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் தாம் வெற்றி பெற்றதும் மீனவ நலன் சார்ந்த பிரச்சனைகளை 100 சதவீதம் நிறைவேற்றி தருவதாக உறுதி அளித்தார்.

இதில் ஆர்.கே.நகர் கிழக்கு பகுதி செயலாளர் ஆர்.எஸ். ஜெனார்தனம், மாவட்ட பொருளாளர் ஏ.கணேசன், மாவட்ட மீணவரணி செயலாளர் பி.ஜெகன், விசைப்படகு நல சங்க தலைவர் பி.குப்பன், மற்றும் சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *