சென்னை, ஆக. 10–
உண்மை குற்றவாளிகளை கண்டறியகோரி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி, இயக்குர் பா.ரஞ்சித் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
வள்ளுவர் கோட்டத்தில் நேற்று ஆம்ஸ்ட்ராங் கொலையில் உண்மை குற்றவாளிகளை கண்டறியகோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இதில், பகுஜன் சமாஜ் கட்சியினரும், ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினரும் கலந்து கொண்டனர். ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடியும் அவருடைய 2 வயது மகளும் கலந்துக் கொண்டனர்.
மேலும், இயக்குனர் பா.ரஞ்சித், கட்சி ஆதரவாளர்கள் பலரும் போராட்டத்தில் கலந்துக் கொண்டனர். போராட்டத்தின்போது, நீதி வேண்டும் நீதி வேண்டும் ஆம்ஸ்ட்ராங்கின் கொலைக்கு நீதி வேண்டும் னெ பதாகைகளை ஏந்து கோஷமிட்டனர்.
இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி மற்றும் இயக்குனர் பா.ரஞ்சித் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அனுமதியின்றி கூடுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 1500 பேர் மீது நுங்கம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.