வாழ்வியல்

ஆர்டிக் பகுதி வெப்பத்தால் உலகில் பாதிப்பு ஏற்படும்

கிரீன்லாந்தின் பனிக்கட்டிகள், பெரும் அளவிலான உறைந்த நீர் இருக்கும் இடமாகும். இது நெருக்கமான கண்காணிக்கப்பட்டு வருகிறது. அங்கிருக்கும் அனைத்து பனிக்கட்டிகளும் உருகினால், கடல்மட்டம் ஏழு மீட்டர் அளவிற்கு உயரும். இதனால், உலகில் உள்ள கடலோர மக்கள் பாதிக்கும் அபாயம் உள்ளது.

காற்றில் உள்ள ஈரப்பதம் தான், மழைக்கு பதிலாக பனியாக பொழிகிறது. இதனால், வெயில் காலத்தில் பனி உருகுவதை இது சமநிலைப்படுத்தும்.

எந்தெந்த இடங்களில் எல்லாம் பனி உருகுகிறது என்று காண்பிக்கும் செயற்கைக்கோள் படங்களை விஞ்ஞானிகள் ஆராய்ந்தனர். மழை பொழிவு பதிவு செய்யப்பட்டபோது, 20 தானியங்கி வானிலை நிலையங்களில் இருந்து எடுக்கப்பட்ட தரவுகளோடு, இந்தப் புகைப் படங்களை சேர்த்தனர்.

இந்த ஆராய்ச்சியின் கண்டுபிடிப்புகள், ‘த கிரையோஸ்பர்’ பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டது. அதில், ஆரம்பக்கட்டத்தில் ஒவ்வோர் ஆண்டும் பனிக்காலத்தின் போது இரண்டு முறை மழை பொழிந்தது. அதுவே 2012 ஆம் ஆண்டு இது 12 முறையாக உயர்ந்துள்ளது.

1979-2012 ஆம் ஆண்டிற்குள், 300 தடவைகளுக்கு மேல், மழைப் பொழிவானது பனிக்கட்டிகள் உருகுவதை தூண்டியுள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.

குளிர் காலத்தில் மழைப் பொழிவு இருப்பது எங்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது. தெற்கில் இருந்து வரும் வெப்பக்காற்றுதான் இதற்கு காரணம். ஆனாலும், இது மழைப் பொழிவுடன் தொடர்புப் படுத்தப்பட்டிருப்பதை பார்க்க ஆச்சரியமாக இருந்தது என்கிறார், ஜெர்மனியில் உள்ள ஜியோமர் கடல் ஆராய்ச்சி மையத்தை சேர்ந்த மரிலெனா ஒல்ட்மான்ஸ்.

–––––––––––––––––––––––––

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *