தலையங்கம்
பிப்ரவரி மாதம் ஆரோக்கியமான வாழ்க்கை முறை விழிப்புணர்வு மாதமாக அனுசரிக்கப்படுகிறது. இந்த மாதம் நிறைவுக்கு வரும் இந்தத் தருணத்தில் நம் ஆரோக்கியத்தை முன்னுரிமை தந்து சிறு மாற்றங்களின் மூலம் வாழ்வின் தரத்தை மேம்படுத்துவது பற்றி சிந்திக்க ஒரு நேரமாகும். இதைத் தொடுத்துக் கூறும் டாக்டர் ஸ்பூர்த்தி பிரோமேட் மருத்துவமனையின் மருத்துவ நிபுணர், ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு சீரான, சிறிய மாற்றங்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறார்.
டாக்டர் ஸ்பூர்த்தி தரும் அறிவுரை,
உடனடியாக பெரிய மாற்றங்களை செய்வதற்கு பதிலாக சிறிய ஆனால் தொடர்ச்சியான மாற்றங்கள் கூட ஆரோக்கியமான வாழ்க்கைக்கு வழிவகுக்கும்.
சீரிய உணவுகள், சரியான தூக்கம், நீர் அருந்துதல், உடற்பயிற்சி மற்றும் மனநல பராமரிப்பு ஆகியவற்றின் மூலம் எளிமையான முறையில் ஆரோக்கியத்தை முன்னேற்றலாம்.
சரியான உணவு ஆரோக்கியத்தின் அடித்தளம் ஆகும். உலக சுகாதார நிறுவனம் (WHO) கூற்றின்படி சீரான உணவு இருதய நோய், டயாப்படீஸ், சில காச நோய்களின் ஆபத்தை குறைக்க உதவுகிறது. முக்கியமாக புரதங்கள், கொழுப்புகள், நார்ச்சத்து மிக்க உணவுகளை உட்கொள்வது உடல்நலத்திற்கு இன்றியமையாதது. அளவுடன் உணவுகளை உண்பது எடை கட்டுப்பாடு மற்றும் நோய் தடுப்பதற்கு உதவும்.
சுறுசுறுப்பாக இருக்க வேண்டும்; அதற்கு தினசரி உடற்பயிற்சி முக்கியமானது என வலியுறுத்துகிறார். நடனம், சைக்கிள் ஓட்டுதல் அல்லது யோகா போன்றவை உடலின் இருதய சுகாதாரத்தை மேம்படுத்துவதோடு, தசைகள் உறுதியாகவும் மனநலத்துக்கு வழிவகுக்கவும் செய்கின்றன.
நீர்மட்டும் சரியாக இருக்க வேண்டுமாம். நாளொன்றுக்கு 8–10 கண்ணாடி டம்ப்ளர் தண்ணீர் குடிப்பது உடலின் அனைத்து செயல்பாடுகளுக்கும் முக்கியம். சரியான அளவு நீர் குடித்தால் நம் எண்ணமாற்ற சக்தி மற்றும் உடல் செயல்திறன் ஆகியவற்றை மேம்படுத்தும். இது சீரான எரிசக்தியை வழங்கி சருமத்தை மிருதுவாக வைத்திருக்க உதவும்.
தூக்கமும் அவசியம் என்கிறார். உடல் மற்றும் மனநலத்திற்கு நல்ல தூக்கம் அத்தியாவசியமானது.
டாக்டர் ஸ்பூர்த்தி கூறுவதின்படி தினமும் 7–8 மணிநேரங்கள் தூங்குவது ஆரோக்கியமான வாழ்க்கைக்கு உதவுகிறது. சர்வதேச நிபுணர்கள் கூறுவதும் தூக்கம் நினைவாற்றலை மேம்படுத்தி, நோய் எதிர்ப்புத் திறனை வளர்த்து மன உணர்வுகளை கட்டுப்படுத்த உதவும்.
மன அழுத்தத்தை கையாளுதலும் மிக அவசியம் என்று வலியுறுத்துகிறார்.
மனநலம் என்பது உடல்நலத்துக்கு சமமானது. தியானம், யோகா, அல்லது ஜர்னலிங் (தினசரி நிகழ்வுகளை எழுதுதல்) ஆகியவை மன அழுத்தத்தை குறைக்க உதவும். தொடர் மன அழுத்தம் (Chronic Stress) இருதய நோய்கள், கவலை மற்றும் மனச்சோர்வை ஏற்படுத்தும். இதைத் தவிர்க்க சுவாரசியமான செயல்களில் ஈடுபடுதல் மற்றும் ஓய்வுக்கான நேரத்தை ஏற்படுத்துதல் முக்கியம்.
அன்றாட வழக்கமான , periodic, உடல் பரிசோதனைகள், ஆரோக்கிய பிரச்சினைகளை ஆரம்பத்திலேயே கண்டறிய உதவுகின்றன. வயதையும் உடல்நல வரலாற்றையும் அடிப்படையாகக் கொண்டு பரிசோதனைகளை மேற்கொள்ள டாக்டர் ஸ்பூர்த்தி பரிந்துரை செய்கிறார். இவை ஆரம்ப சிகிச்சை மற்றும் தடுப்பு பராமரிப்பு மூலம் பெரிய சிக்கல்களைத் தவிர்க்க உதவும்.
மொத்தத்தில் ஆரோக்கியமான வாழ்க்கை என்பது சிறிய மாற்றங்களால் தொடங்கும். சீரான உணவுப்பழக்கம், நிம்மதியான தூக்கம், நிறைய நீர் குடித்தல், உடற்பயிற்சி மற்றும் மனநல பராமரிப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்தினால் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழலாம்.