செய்திகள்

ஆரணி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு ரூ.6.82 லட்சம் ஊக்கத்தொகை

திருவண்ணாமலை, நவ. 5–

ஆரணி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு 2015-–2016 ஆம் ஆண்டிற்கான ஊக்கத்தொகை ரூ. 6.82 லட்சத்தை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் வழங்கினார்.

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க அலுவலக வளாகத்தில் நடைபெற்ற அரசு விழாவில் ஆரணி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு 2015-–2016 ஆம் ஆண்டிற்கான ஊக்கத்தொகை ரூ.6.82 லட்சத்தை தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர்.சேவூர் எஸ்.இராமச்சந்திரன் வழங்கி பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:

‘மக்களால் நான் மக்களுக்காக நான் என மக்களாட்சி நடத்திய ஜெயலலிதாவின் வழியல் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிற முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் ஆணைக்கிணங்க ஆரணி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. ஆரணி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் உறுப்பினர்கள் எண்ணிக்கை 12261, தற்போது நடைமுறையில் உள்ள உறுப்பினர்கள் எண்ணிக்கை 6600 ஆகும். இச்சங்கம் கடந்த 2015-–2016-ம் ஆண்டு ரூ.5.23 லட்சமும், 2016-–2017-ம் ஆண்டு ரூ.6.37 லட்சமும், 2017-–2018-ம் ஆண்டு ரூ.5.50 லட்சமும் இலாபத் தொகை ஈட்டியுள்ளது. இதில் கடந்த 2015–-2016-ம் ஆண்டு 22.72 லட்சம் லிட்டர் பால் வழங்கிய 1180 உறுப்பனர்களுக்கு இன்று ஊக்கத்தொகையாக மொத்தம் ரூ.6.82 இலட்சம் வழங்கப்பட்டது. இந்த ஊக்கத்தொகை ஒரு லிட்டருக்கு 30 பைசா என்ற அடிப்படையில் வழங்கப்படுகிறது.’ என்றார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி, மாவட்ட செயலாளர் மற்றும் செய்யார் சட்டமன்ற உறுப்பினர் தூசி கே.மோகன் ஆரணி பாராளுமன்ற உறுப்பினர் செஞ்சி சேவல் வெ.ஏழுமலை, , துணைப் பதிவாளர் (பால்வளம்) எம்.ராஜா, ஆரணி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் தலைவர் அ.குமுதவள்ளி, துணைத் தலைவர் சைதை கே.சுப்பிரமணி, நகர பேரவை செயலாளர் பாரி பி.பாபு, நகர செயலாளர் எ.அசோக்குமார், ஒன்றிய செயலாளர் பிஆர்ஜி சேகர், மேற்கு ஆரணி ஒன்றிய செயலாளர் அரையாளம் எம்.வேலு , செய்யார். கே.வி. வெங்கட்ராமன், நகர அவைத்தலைவர் எஸ். ஜோதிலிங்கம், எம்ஜிஆர் மன்ற இணை துணை செயலாளர்கள் அ. கோவிந்தராசன், எஸ். சுந்தரமூர்த்தி, மாவட்ட பிரதிநிதி அகிலேஷ் பி.ஜி. பாபு, நகர மாணவரணி செயலாளர் பிஸ்கட் கே. குமரன், தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட துணை செயலாளர் வேலப்பாடி எஸ்.பி. சரவணன், ஆரணி ஒன்றிய துணை செயலாளர் இரும்பேடு வேலு, பையூர் ஆர்.சதீஷ்குமார், பாரதிராஜா, இ.பி நகர்.குமார், ஒன்றிய பிரதிநிதி புலவன்பாடி ஆர்.சுரேஷ்ராஜா, இயக்குநர்கள், உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *