செய்திகள்

ஆரணி அரையாளம் பெரிய ஏரி புனரமைப்பு பணி: அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் துவக்கி வைத்தார்

திருவண்ணாமலை, மே 23–

ஆரணியை அடுத்த அரையாளம் பெரிய ஏரி புனரமைக்கும் பணியை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் துவக்கி வைத்தார். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த அரையாளம் பெரிய ஏரியில் பொதுப்பணித் துறையின் நீர்வள ஆதார அமைப்பு மூலமாக 2020-2021 ஆம் ஆண்டில் தமிழ்நாடு முதலமைச்சரின் குடிமராமத்து திட்டத்தின் கீழ் ரூ.67 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும் புனரமைப்பு பணிகளை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ். இராமச்சந்திரன் பூமிபூஜை போட்டு பணிகளை துவக்கி வைத்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

முதலமைச்சரின் ஆணைக்கிணங்க தமிழகத்தில் உள்ள பொதுப்பணித் துறையின் நீர்வள ஆதார அமைப்பை சார்ந்த ஏரிகளை அந்தந்த பகுதி விவசாயிகளின் பங்களிப்புடன் குடிமராமத்து திட்டத்தின் மூலம் சீரமைக்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் திருவண்ணாமலை மாவட்டத்தில் 2020–-2021 ஆம் ஆண்டில் ரூ.31.20 கோடி மதிப்பீட்டில் 59 ஏரிகள் புனரமைக்கும் பணிகள் நடைபெறுகிறது. இதன் மூலம் 6034.81 ஹெக்டேர் விவசாய பாசன நிலங்கள் பயன்பெறும். குடிமராமத்துப் பணிகள் நீரினை பயன்படுத்தும் சங்கங்கள் மூலமாக நியமன முறையில் விவசாயிகளின் 10 சதவீத பங்களிப்புடன் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் மூலம் தண்ணீர் வீணாவதை தடுத்தும், தண்ணீரினை சேமித்தும், பாசன உறுதியளிக்கவும், நீர் ஆதாரத்தை பெருக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் 2020-–2021 ஆம் ஆண்டில் ரூ.31.20 கோடி மதிப்பீட்டில் 59 ஏரிகள் புனரமைக்கும் பணிகள் நடைபெறுகிறது, இதன் மூலம் 6034.81 ஹெக்டேர் விவசாய பாசன நிலங்கள் பயன்பெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் கே.எஸ். கந்தசாமி, செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் தூசி கே. மோகன், மத்திய பெண்ணையாறு வடிநில கோட்ட செயற் பொறியாளர். ஏ. மகேந்திரன், உதவி செயற்பொறியாளர் (ஆரணி உபகோட்டம்) ஏ. அறிவழகன், ஆரணி வட்டாட்சியர் தியாகராஜன், மேற்கு ஆரணி ஒன்றிய சேர்மன் பச்சையம்மாள்சீனிவாசன் நகர செயலாளர் எ. அசோக்குமார், ஒன்றிய செயலாளர்கள் அரையாளம். எம். வேலு, பி.ஆர்.ஜி. சேகர், ஊராட்சி மன்றத் தலைவர்கள் மருசூர். சதீஷ், தச்சூர் வடிவேலு, ஒன்றிய பிரதிநிதி புலவன்பாடி ஆர். சுரேஷ்ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *