செய்திகள்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: தவறான தகவல்களை வெளியிட்டாள் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்

Makkal Kural Official

இயக்குநர் நெல்சன் மனைவி மோனிஷா அறிவிப்பு

சென்னை, ஆக. 22–

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக ஆதாரமற்ற தகவல்களை சிலர் பரப்புகின்றனர். தவறான தகவல்களை பரப்பினால் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று இயக்குநர் நெல்சன் மனைவி மோனிஷா அறிவித்துள்ளார்.

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலையில் தொடர்புடையவர்களை பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆற்காடு சுரேஷின் தம்பியான பொன்னை பாலு, பெண் தாதா மலர்கொடி, கஞ்சா விற்பனை செய்த அஞ்சலை, ஹரிதரன், இது போன்றவர்கள் மட்டுமல்லாது அதிமுக, திமுக, பாஜக, தாமாக, காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சி நிர்வாகிகளும் இந்த கொலை சம்பவத்தில் தொடர்பு இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்படும் ரவுடி சம்போ செந்திலின் கூட்டாளி மொட்டை கிருஷ்ணன். இவர் குடும்பத்துடன் வெளிநாடு தப்பிச் சென்றுள்ளார். மொட்டை கிருஷ்ணனுக்கு அடைக்கலம் கொடுத்ததாகவும், மேலும் வெளிநாடு தப்பி செல்வதற்கு முன்பு திரைப்பட இயக்குநர் நெல்சன் மனைவி மோனிஷா தொடர்ந்து அவருடன் போனில் பேசியதாக போலீசார் நடத்திய விசாரணையில் பரபரப்பான தகவல் வெளியாகியது.

மேலும், தலைமறைவாக உள்ள வழக்கறிஞர் மொட்டை கிருஷ்ணனின் வங்கி கணக்கிற்கு நெல்சன் மனைவியின் வங்கி கணக்கில் இருந்து ரூ.75 லட்சம் சென்றிருப்பதை போலீசார் கண்டுபிடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில், இயக்குநர் நெல்சனின் மனைவி மோனிஷா இது குறித்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் கூறப்பட்டுள்ளதாவது:

வழக்கறிஞர் மொட்டை கிருஷ்ணனுடன் பணப்பரிவர்த்தை செய்ததாக வெளியான தகவலில் உண்மை இல்லை என்றும் அது முற்றிலும் தவறான தகவல். அடிப்படை ஆதாரமற்ற தகவல்களை சிலர் பரப்புகின்றனர். வழக்கறிஞர் கிருஷ்ணனுடன் பணப்பரிவர்த்தனை என்ற தகவல் அதிர்ச்சி அளிக்கிறது. அடிப்படை ஆதாரமற்ற செய்திகளை பரப்ப வேண்டாம். அடிப்படை ஆதாரமற்ற தகவல்களை பரப்புவது எனக்கும், என் கணவர் இயக்குநர் நெல்சனின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் செயல். தவறான செய்தியை வெளியிட்டவர்கள் அதனை நீக்க வேண்டும். தொடர்ந்து தவறான தகவல்களை பரப்பினால் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *