சிறுகதை

ஆம்லேட்- ராஜா செல்லமுத்து

சரியாக 9 மணிக்கு தன் அலுவலகத்தில் இருக்க வேண்டும் என்று அருள் கருப்புவிடமும் செல்வத்திடம் சொல்லியிருந்தார்.

அதிகாலையே எழுந்த செல்வம் குளித்து முடித்து கருப்புக்கு போன் செய்தான்.

கருப்பு நீங்க எத்தனை மணிக்கு கிளம்புவே என்று கேட்டான்.

நான் ஏழு மணிக்கெல்லாம் கிளம்பி விடுவேன் என்று கருப்பு பதில் சொன்னார்.

ஓகே எங்க என்ன பிக்கப் பண்ணிக்கிருவ? என்று செல்வம் கேட்டான்.

வழக்கம்போல நிற்கிற பிள்ளையார் கோவில்ல நில்லு என்று கருப்பு சொன்னார்.

9 மணி அப்பாயிண்ட்மெண்ட் தவற விடக்கூடாது என்பதற்காக செல்வம் 5 மணிக்கெல்லாம் எழுந்து குளித்துவிட்டு ஏழு மணிக்கெல்லாம் பஸ் ஏறி கருப்பு சொன்னத நேரத்திற்கு முன்னதாகவே போய் நின்றான் செல்வம்.

ஒன்பது மணி என்றால் அதற்கு முன்னதாக கிளம்பி ஆகவேண்டும் என்பது செல்வத்தின் பாலிசி. அவன் ஒரு நாளும் எங்கும் தாமதமாகச் சென்றது கிடையாது.

அதனால் நேரம் கரையக்கரைய செல்வத்தின் அடி வயிற்றில் புளியை கரைத்தது.

மணி 8, எட்டரை என்று கழிந்து கொண்டிருக்கும் ஒவ்வொரு நிமிடமும் செல்வத்தின் அடி வயிற்றில் பயம் தொற்றிக்கொண்டது.

ரொம்ப முக்கியமான அப்பாயிண்ட்மெண்ட்.ஏன் கருப்பு இப்படி செய்கிறார்?என்று அவரின் செல்போனுக்கு தொடர்பு கொண்டான் செல்வம்.

நாலைந்து தடவை செல்போன் அடித்தும் கருப்பு போன் எடுக்கவே இல்லை. டூவீலரில் வந்து கொண்டிருப்பார் என்று நினைத்த செல்வம் அதற்குமேல் அவரை தொந்தரவு செய்ய விரும்பவில்லை.

ஆனால் நேரம் கரைந்து கொண்டே இருந்தது. வரும் வாகனங்களை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்தான் செல்வம்.

ஆனால் வரும் வாகனத்தில் கருப்பு இல்லை என்பது மட்டும் செல்வதற்கு தெளிவாக தெரிந்தது. மணி ஒன்பதைத் தொட்டு நின்றது கடிகாரம்.

ஐயையோ இங்கேயே ஒன்பது ஆச்சு என்று செல்வம் தனக்குத் தானே வருந்திக் கொண்டான்.

வாகனங்களை ஆவலாக பார்த்தான் : கருப்பு வரவே இல்லை. மறுபடியும் கருப்பு விற்கு தொடர்புகொள்ள கருப்பும் செல்போனை எடுக்கவில்லை.

அந்தப் பெரிய மனிதர் நம்மை 9 மணிக்கு வரச் சொன்னாரு. ஏன் இப்படி செய்கிறார் என்று கருப்பை நொந்து கொண்டான் செல்வம்.

அப்படி இப்படி என்று ஒரு வழியாக 9 .10 க்கு பிள்ளையார் கோவிலுக்கு வந்தார் கருப்பு.

என்ன சார் லேட்டாயிடுச்சு? என்று செல்வம் கேட்டான்.

லேட்டாயிடுச்சு என்று ஒற்றை வரியில் பதில் சொன்னார்.

இதற்கு மேல் பேசினால் விவாதம் ஏற்படும் என்பதற்காக செல்வம் தன் வார்த்தைகளை சுருக்கிக் கொண்டான் . இருசக்கர வாகனம் சந்தடி நிறைந்த வாகனங்களுக்கு இடையே சென்று கொண்டிருந்தது. கருப்பு வரவும் சாப்பிட்டுக் கொள்ளலாம் என்று நினைத்த செல்வமும் ‘‘கருப்பு சாப்பிட்டீங்களா?’’ என்று கேட்க .இல்லையே நாம ரெண்டு பேரும் சேர்ந்து சாப்பிடலாம் என்று சொன்னீர்களே? அதான் நான் சாப்பிடல என்று கருப்பு சொன்னார்.

சரி வாங்க ரெண்டு இட்லி சாப்பிட்டு போகலாம்; ரொம்ப நேரமாயிடுச்சு. அதனால் எதுவும் ஆர்டர் பண்ணி சாப்பிட்டா மேலும் டைம் ஆகும். அதனால இட்லி சாப்பிடலாம் என்று செல்வம் சொன்னான்.

சரி என்று தலையாட்டிய கருப்பு இட்லி ,தோசை என்று வளைத்துச் சொல்ல ஆரம்பித்தார் . கூடவே ஆம்லெட் ஒன்று – பெப்பர் தூக்கலா என்று ஒரு ஆர்டர் கொடுத்தார்

அடப்பாவி, ஏற்கனவே டைம் ஆயிருச்சு. இதில ஆம்லெட் வேறயா? எப்படி இருக்குராங்க ஆளுக. ஒரு மனிதன் சொன்னால் அந்த நேரத்தை கடைப்பிடிக்க வேண்டாமா ? என்று மனதுக்குள் நினைத்துக் கொண்ட செல்வம் ஒருவழியாக சாப்பிட்டு முடித்தான்

பெப்பர் தூக்கலாக ஆம்லெட் வர கொஞ்சம் லேட் ஆனது . கருப்பும் அப்படி இப்படி என்று சாப்பிட்டுவிட்டு எழுந்திருக்கும் போது மணி 9.30 தொட்டு நின்றது. செல்வத்திற்கு இருப்புக் கொள்ளவில்லை.

அந்தப் பெரிய மனிதன் அலுவலகத்திற்கு நுழைந்தபோது ஒன்பதரை என்று காட்டியது.

என்ன இவ்வளவு லேட் ஆயிருச்சு? என்று அந்த பெரிய மனிதர் கேட்டார்.

லேட் ஆயிருச்சு? என்று என்னிடம் சொன்ன பதிலையே அந்தப் பெரிய மனிதரிடம் சொன்னார் கருப்பு.

அந்த லேட்டுக்கு காரணம் ஆம்லெட் என்பது செல்வதற்கு மட்டும் தான் தெரியும்.

ராஜா செல்லமுத்துவின் பிற கதைகள்:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *