அதை வெளிக் காட்டிக் கொள்ள முடியாமல் தவித்தாள் மதுமதி.
ஏனென்றால் அவள் அம்மா கோபம் வந்தால் சுற்றுச்சூழ்நிலை பாராது நன்கு திட்டி விடுவாள் என்ற பயம் அவளை நன்கு ஆட்கொண்டிருந்தது.
மதுமதி : சாந்தினி – சுந்தர் தம்பதிக்கு ஒரே மகள். அவளை தமது வீட்டிற்குப் பக்கத்திலுள்ள பள்ளியில் சேர்த்தனர். மதியம் உணவு இடை வேளையின் போது சாந்தினி பள்ளி சென்று தனது மகள் மதுமதி கொண்டு போன சாப்பாட்டை சரியாக சாப்பிட்டாளா என்று கவனிக்கத் தவறுவதில்லை. மகளுக்கு அம்மா வருகையினால் தனது பள்ளித் தோழர்களுடன் நன்கு பேசிப்பழக முடியவில்லையே என்ற வருத்தம் இருந்தது.
பள்ளியில் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியைகள் தன் வீட்டுப் பிள்ளையைப் போல் பாரபட்சமின்றி மாணவ மாணவியரை நேசித்தனர். பாடங்களை தெளிவாக கற்பித்தார்கள். பள்ளியும் நல்ல பெயருடன் இயங்கி வந்தது. நடுத்தர மக்கள் இந்தப் பள்ளியில் தான் தமது பிள்ளைகளைச் சேர்த்தனர். பள்ளியில் வாங்கும் கட்டணம் மற்ற பள்ளிகளை விட இங்கு குறைவு தான் என்பது ஒரு புறம் இருந்தாலும் மாணவர்கள் தேர்ச்சி விகிதம் இந்தப் பள்ளியில் எப்போதுமே நூறு சதவீதம் தான். வசதி படைத்தவர்கள் இந்தப் பள்ளியில் தனது பிள்ளைகளை சேர்க்கத் தயங்கினார்கள். ஏனெனில் வசதி குறைந்த மாணவ மாணவர்கள் நிறைய இந்தப் பள்ளியில் படிப்பது ஒரு காரணமாக அமைந்தாலும் தங்களது கௌரவமே அவர்களுக்கு பெரிதாகத் தோன்றியது என்பதே உண்மையான காரணமாகும்.
இந்தப் பள்ளியில் மாணவ மாணவியர் திறமைகளை நன்கு அறிந்து, அவர்களுக்கு அவர்களது விருப்பப்படி வேண்டியதைக் கற்றுத் தருகின்றனர். படித்து முடித்துச் செல்லும் போதும் மற்றும் மேல் படிப்பு முடித்த பின்பும் அவர்கள் சுயமாக தொழில் செய்யும் திறமையை எளிதாக அமைத்துக் கொள்ளப் பள்ளியில் கற்றது உதவும் வகையில் பள்ளியில் மாணவ மாணவியருக்குக் கற்றுத் தரப்பட்டது. பள்ளியில் அவர்கள் திறமைக்கு ஏற்ப எப்படி எதிர் காலம் அமைத்துக் கொள்வதென பள்ளியில் படித்தவர்களுக்கு வழி காட்டுதல் செய்தனர். ஆராய்ச்சிகளில் ஈடுபடும் மாணவ மாணவர்களுக்கு சிப்பாக இந்தப் பள்ளியில் சொல்லித் தந்தார்கள்.
பாடம் சொல்லிக் கொடுக்கும் இருபால் ஆசிரியர்களும் மாணவ மாணவியரை குழுவாகப் பிரித்து அவர்கள் விரும்பும் கல்வியைக் கற்றுத் தந்தனர். அன்பால் பள்ளியில் பயில்வோரை கட்டிப் போட்டனர். அடிக்கடி பெற்றோர்களை அழைத்து அவர்களிடம் பிள்ளைகள் பற்றி புகார் தெரிவித்ததில்லை இந்தப் பள்ளி இரு பால் ஆசிரியர்களும். பள்ளி தலைமையாசிரியர் வகுப்புகளுக்குச் சென்று ஆய்வு செய்து ஏதும் குறையில்லாமல் பார்த்துக் கொள்வார். புதிதாக பள்ளியில் சேரும் ஆசிரியர்களுக்கு தலைமையாசிரியரே அறிவுரைகள் கூறி அவர்களை வழி நடத்துவார்.
இந்தப் பள்ளி மாணவ மாணவியர் படிப்பு மற்றுமின்றி விளையாட்டு மற்றும் பல போட்டிகளில் வென்று பதக்கங்கள் குவித்தனர். தலைமையாசிரியர் ஒரு பதிவேட்டில் பதக்கங்கள் பெற்றவர்கள் பெயர் மற்றும் எல்லா விவரத்தையும் பதிவு செய்து வைத்திருந்தார். என்றைக்கு வேண்டுமானாலும் வெற்றி பெற்றவர்கள் தனது சாதனையை ஏட்டின் மூலம் நினைவு கூறலாம் என்பார் தலைமையாசிரியர். தற்போது கணினி வந்ததால் எல்லாவற்றையும் கணினியில் பதிவு செய்து வைத்திருந்தார்.
அன்று மதியம் சில பெற்றோர், பள்ளி வளாகத்தில் சற்று கோபமாக பேசிக் கொண்டிருப்பதைக் கண்ட தலைமையாசிரியர் அங்கு வந்து என்ன வென்று கேட்க உங்கள் பள்ளி ஆசிரியர் ஒருவர் இப்படி நடக்கலாமா என்று கத்தினார்கள். உடனே அவர்களை தனது அறைக்கு அழைத்துச் சென்ற தலைமையாசிரியர் அவர்களை அமர வைத்து விசாரித்தார். அவர்கள் சொன்னதைக் கேட்டு சற்று அதிர்ந்த தலைமையாசிரியர் அவர்களை அழைத்துக் கொண்டு அந்த வகுப்பறைக்குச் சென்றார்.
அங்கு அந்த வகுப்பு ஆசிரியர் ஒரு வித அழுத்தத்தில் இருப்பதை அறிந்த தலைமையாசிரியர் மதுமதி மற்றும் சில மாணவர்களை வெளியே அழைத்து நடந்தது என்ன வென்று கேட்டார்.
முதலில் மதுமதியிடம் ஏன் உணவை கீழே கொட்டினாய் என்று கேட்டார்.
அவள் பதிலேதும் கூறாமல் நின்றாள்.
அவள் அம்மா,
‘‘பதில் சொல்லக் கூடாதென என் பெண்ணை ஆசிரியர் மிரட்டி வைத்துள்ளார்’’ என்றார்.
இதற்குள் அங்கு வந்த ஆசிரியர் ஒரு மாணவியிடம் நடந்ததைக் கூறுமாறு கூற அந்த மாணவி தலைமையாசிரியரிடம் வகுப்பிற்கு வந்தவுடன் ஆசிரியர் மதுமதியிடம் காதில் சிலவற்றைக் கூறி ஒரு பொருளை சுட்டிக் காட்டினார்.
பின் நாங்கள் மதுமதியிடம் கேட்ட போது அவள் ஏதும் கூறவில்லை என்றனர்.
மதுமதி அம்மா பார்த்தீர்களா ஆசிரியரின் செய்கையை என்றாள்.
அப்போது ஆசிரியர் மதுமிதாவிடம் நான் என்ன சொன்னேன் என்று கூறும்படி கூறினார்.
மதுமிதா நீங்கள் உங்கள் சாப்பாடு டப்பாவைக் காட்டி மதியம் நீங்கள் உணவு அருந்திய உடன் அதைக் குப்பைத் தொட்டியில் கொட்டி விடு, யாருக்கும் தெரிய வேண்டாம், ஏனெனில் அது கெட்டுப் போய் விட்டதென்று சொன்னீர்கள்.
நான் தான் ஏதோ ஒரு யோசனையில் எனது சாப்பாட்டைக் கொட்டி விட்டேன் என்றாள்.
யாருக்கும் தெரிய வேண்டாமெனத் தானே உன்னிடம் கூறினேன் என்று மீண்டும் ஆசிரியர் கூறினார்.
மதுமிதா, ‘‘ஆமாம் சார், என் மேல் தான் தப்பு ’’ என்றும் எனது அம்மா என்னைக் கேட்காமல் அவசரப் பட்டு விட்டார்கள் என்றும் கூறினாள்.
பக்கத்து வகுப்பில் எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்போருள் மெய்ப் பொருள் காண்பது அறிவு என்ற குறள் ஒலித்தது.
தலைமையாசிரியர் இன்று சாப்பிடாமல் ஆசிரியர் தியாகம் செய்துள்ளார் என்று கூறிவிட்டு நகர்ந்தார். வந்திருந்தவர்கள் கொள்ளி மேல் எறும்பு போல் ஆனார்கள்.