புதுடெல்லி, ஜூன்.13-
ஆமதாபாத் விமான விபத்து நெஞ்சை ெநாறுக்கும் பேரிடர் என ஜனாதிபதி திரவுபதி முர்மு கடும் அதிர்ச்சி வெளியிட்டு உள்ளார்.
குஜராத் மாநிலம் ஆமதாபாத் விமான நிலையத்தில் இருந்து, ஏர் இந்தியா நிறுவனத்துக்கு சொந்தமான டிரீம்லைனர் விமானம் ஒன்று லண்டனுக்கு நேற்று 230 பயணிகள், 10 பணியாளர்கள் மற்றும் 2 விமானிகள் என மொத்தம் 242 பேருடன் புறப்பட்டது. அந்த விமானம் வானில் பறந்த சில நிமிடங்களில் அந்த விமானம் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. விமானத்தின் பெரும்பகுதி தீயில் முற்றிலும் எரிந்துவிட்டன. பயணிகள் உள்பட பலர் உடல் கருகி பிணமாக கிடந்தனர். அவர்களில் பலரது உடல்கள் அடையாளம் காண முடியாமல் இருந்தது. இந்த நிலையில் விமானத்தில் பயணித்த 242 பேரில் 241 பேர் உயிரிழந்ததாக ஏர் இந்தியா நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மேலும் இந்த கோர சம்பவத்தில், விஷ்வாஸ் குமார் என்ற பயணி ஒருவர் மட்டும் உயிர் தப்பினார் என்றும், அவருக்கு மருத்துவ மனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வரு வதாகவும் தெரி விக்கப்பட்டுள்ளது.
உலகையே பெரும் பரபரப்புக்கு உள்ளாக்கிய இந்த சம்பவம் தொடர்பாக தலைவர்கள் கடும் அதிர்ச்சி வெளியிட்டு உள்ளனர்.
ஜனாதிபதி திரவுபதி
அந்தவகையில் ஜனாதிபதி திரவுபதி முர்மு தனது எக்ஸ் தளத்தில், ‘இது (விமான விபத்து) ஒரு நெஞ்சை நொறுக்கும் பேரிடர். எனது எண்ணங்களும், பிரார்த்தனையும் பாதிக்கப்பட்ட மக்களுடன் இருக்கிறது. விவரிக்க முடியாத இந்த துயரமான நேரத்தில் அவர்களுடன் ஒட்டுமொத்த நாடும் இருக்கிறது’ என குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் மோடி துயரம்
மோடி தனது எக்ஸ் தளத்தில், ‘ஆமதாபாத்தில் நடந்த துயரச் சம்பவம் நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது, வருத்தப்படுத்தியுள்ளது. வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவுக்கு இதயத்தை ெநாறுக்கி இருக்கிறது.
இந்த துயரமான நேரத்தில் பாதிக்கப்பட்ட அனைவருடனும் எனது எண்ணங்கள் உள்ளன’ என துயரத்தை பகிர்ந்து இருந்தார்.
கவர்னர் ஆர்.என்.ரவி
தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி:– விமான விபத்தில் விலை மதிப்பற்ற உயிர்களை இழந்தது மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
முதலமைச்சர் ஸ்டாலின்
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்:–- ஆமதாபாத் விமான விபத்து அறிந்து மிகவும் அதிர்ச்சி அடைந்தேன். பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் குறித்து மிகவும் கவலை கொள்கிறேன்.
எடப்பாடி பழனிசாமி
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி:–- ஆமதாபாத் விமான விபத்து செய்தி கேட்டு அதிர்ச்சி யுற்றேன். விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்துள்ள அனைவரும் விரைவில் பூரண உடல் நலம் பெற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
மல்லிகார்ஜுன கார்கே
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது எக்ஸ் தளத்தில், ‘குஜராத்தின் ஆமதாபாத்தில் ஏராளமான பயணிகள் மற்றும் விமான ஊழியர்கள் பயணித்த ஏர் இந்தியா விமான விபத்து குறித்து அறிந்து மிகவும் அதிர்ச்சி யடைந்தேன். கொடூரமான காட்சிகளைப் பார்ப்பது மனதை வேதனைப்படுத்துகிறது. உயிரிழந்த பயணிகள், விமானி மற்றும் ஊழியர் களின் குடும்பத்தினருக்கு எங்கள் ஆழ்ந்த அனுதா பங்கள்’ என கூறியிருந்தார்.
பிரியங்கா
கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா, ‘ஏர் இந்தியா விமானத்தில் பயணித்த பயணிகள் மற்றும் ஊழியர்களின் குடும்பத்தினருக்காக என் இதயம் இரங்குகிறது. கடவுள் உங்கள் அனைவருடனும் இருக்கட்டும்’ என தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டு இருந்தார்.
இதேபோல் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, ஜி.கே.வாசன், பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், நடிகர் சரத்குமார், கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன், இந்திய ஜனநாயக கட்சி தலைவர் ரவி பச்சமுத்து ஆகியோரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
![]()





