லாகூர், டிச.12–
ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு படையினர் நேற்று (ஞாயிறு) பாகிஸ்தானின் ஷாமென் மாவட்டத்தில் லாலா முகமது கிராமத்தில் உள்ள எல்லைப்பகுதியில் திடீர் தாக்குதல் நடத்தினர். பீரங்கியால் குண்டு வீசியும், துப்பாக்கிச்சூடு நடத்தியும் தாக்குதலில் ஈடுபட்டனர். இதை பாகிஸ்தான் ராணுவம் உறுதி செய்துள்ளது.
இந்தத் துப்பாக்கிச்சூட்டில் 11 பேர் கொல்லப்பட்டனர்.
பாகிஸ்தான் -– ஆப்கானிஸ்தான் இடையே பல நூறு கிலோமீட்டர் தூரத்திற்கு எல்லை பரந்து விரிந்துள்ளது. இரு நாட்டு எல்லையிலும் அந்தந்த நாட்டு பாதுகாப்புபடையினர் பாதுகாப்பு மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், ஆப்கானிஸ்தானின் காந்தகார் மாகாண எல்லையில் பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணம் ஷாமென் மாவட்டம் அமைந்துள்ளது. இந்த மாவட்டத்தின் எல்லையில் லால் முகமது என்ற பகுதியில் எல்லைக்கட்டுப்பாட்டு பகுதி உள்ளது. இங்கு இருநாட்டு பாதுகாப்பு படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த எல்லை வழியாக இருநாடுகளுக்கும் இடையே சரக்கு போக்குவரத்தும் நடைபெற்று வருகிறது. பாகிஸ்தானில் மருத்துவ சிகிச்சை பெற வரும் ஆப்கானியர்கள் மற்றும் உறவினர்களைப் பார்க்க வருபவர்கள் உட்பட ஆயிரக்கணக்கானவர்கள் ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானின் சாமன் இடையேயான எல்லையை தினமும் ஆயிரக்கணக்கானவர்கள் கடக்கின்றனர்,
இந்த தாக்குதலை தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த பாகிஸ்தான் வீரர்கள் பதில் தாக்குதல் நடத்தினர். இந்த பதில் தாக்குதலில் ஆப்கானிஸ்தானில் ஒருவர் உயிரிழந்தார். ஆப்கானிஸ்தான் –- பாகிஸ்தான் எல்லையில் நடந்த மோதலில் மொத்தம் 7 பேர் உயிரிழந்தனர். மேலும் 29 பேர் படுகாயமடைந்தனர்.
பாகிஸ்தான் எல்லையில் இருந்து ஆப்கானிஸ்தானுக்குள் அத்துமீறி நுழைய முயன்றதால் இந்த துப்பாக்கிச்சூடு நடந்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
பாகிஸ்தான் புகார்
தலிபான்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்ததில் இருந்து, அண்டை நாடுகளுக்கு இடையே எல்லையில் பதற்றம் அதிகரித்துள்ளது, தீவிரவாத குழுக்கள் ஆப்கானிஸ்தான் மண்ணில் இருந்து தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக பாகிஸ்தான் குற்றம் சாட்டியுள்ளது.
தலிபான்கள் பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுப்பதை மறுக்கிறார்கள், ஆனால் இரு நாடுகளுக்கும் இடையே 2,700 கிலோமீட்டர் எல்லையில் இஸ்லாமாபாத் போடப்பட்டுள்ள வேலியால் கோபமடைந்துள்ளனர்.