செய்திகள்

ஆப்கானிஸ்தானில் பயங்கரம்: மதரசா பள்ளியில் குண்டு வெடித்து 19 மாணவர்கள் பலி

மேலும் 24 பேர் படுகாயம்

காபூல், டிச.1–

குண்டு வெடிப்பு சம்பவத்தில் 19 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். ஆப்கானிஸ்தானில் நேற்று இந்த விபரீத சம்பவம் நடந்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றியதில் இருந்து குண்டுவெடிப்புகளும் வன்முறைகளும் தொடர் கதையாகி இருக்கிறது.

வடக்கு ஆப்கானிஸ்தானில் சமங்கன் மாகாணத்தின் தலைநகரான அய்பக்கில் மதரசா பள்ளி உள்ளது. இங்கு, நேற்று நடந்த குண்டு வெடிப்பில், 19 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பலியானார்கள்; 24 மாணவர்கள் காயமடைந்தனர். இச்சம்பவத்துக்கு, எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பு ஏற்கவில்லை.

இறந்தவர்களில் பெரும்பாலானவர்கள் சிறுவர்கள். தொழுகை நடத்தும்போது விரிக்கப்படும் பாய் மீது ரத்தக்கறை, கண்ணாடிகள் உடைந்து சுக்கல் சுக்கலாகிக் கிடந்தன.

கொடூரமான இந்த சம்பவத்துகு்குக் காரணமானவர்கள் விரைவில் கண்டுபிடிக்கப்படுவார்கள். தண்டிக்கப் படுவார்கள் என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அமெரிக்கா கண்டனம்

இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் நடந்த குண்டுவெடிப்புக்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது. அனைத்து ஆப்கான் குழந்தைகளும் பயமின்றி பள்ளிக்கு செல்ல உரிமை உண்டு என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *