செய்திகள்

ஆபாச நடிகை வழக்கு: டிரம்பு பதவிக்கு அமெரிக்க நீதிமன்றம் திடீர் சிக்கல்

Makkal Kural Official

நியூயார்க், ஜன. 05–

அமெரிக்க அதிபராக பதவியேற்க உள்ள டொனால்ட் டிரம்ப் மீதான ஆபாச நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கில் அமெரிக்க நீதிமன்றம் முக்கிய உத்தரவு பிறப்பித்து உள்ளது. இதனால் அவரது பதவியேற்பு தள்ளி வைக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

அமெரிக்காவின் புதிய அதிபராக ஜனவரி 20 ந் தேதி டொனால்ட் டிரம்ப் பதவியேற்க உள்ளார். அரியணை ஏறும் முனைப்பில் உள்ள டொனால்ட் டிரம்புக்கு தற்போது புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதாவது ஆபாச நடிகையுடன் ரகசிய உறவில் இருந்த வழக்கில் டொனால்ட் டிரம்புக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றம் முக்கிய உத்தரவை பிறப்பித்து உள்ளதால் டொனால்ட் டிரம்ப் அதிபர் ஆவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

கடந்த 2006ம் ஆண்டு டொனால்ட் டிரம்ப், தனது 3வது மனைவி மெலானியாவுக்கு குழந்தை பிறந்தபோது, பிரபல ஆபாச நடிகை ஸ்டார்மி டேனியல்ஸுடன் டொனால்ட் டிரம்ப் உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது.

இதற்கிடையே கடந்த 2016 அமெரிக்க அதிபர் தேர்தலின்போது, டொனால்ட் டிரம்ப், உடனான உறவு குறித்து வெளியில் கூறக்கூடாது என்று தன்னை மிரட்டியதாகவும், இதுகுறித்து வெளியே கூறாமல் இருக்க அந்த நடிகைக்கு 1,30,000 டாலர் (இந்திய மதிப்பில் 1.08 கோடி) தொகை கொடுக்கப்பட்டதாகவும் ஸ்டார்மி கூறினார். லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள சிட்டி நேஷனல் வங்கி வழியாக பணபரிமாற்றம் நடைபெற்றதாக கூறப்படுகிறது.

அதிரடி தீர்ப்பு

ஆபாச நடிகைக்கு டொனால்ட் டிரம்ப் பணம் கொடுத்தது அமெரிக்க சட்டப்படி குற்றம் கிடையாது. ஆனால் தனது கட்சிக்கான தேர்தல் நிதியில் இருந்து அந்த பணத்தைக் அவர் நடிகைக்கு கொடுத்தது சலசலப்பை ஏற்படுத்தியது. மேலும் அதனை மறைக்க தேர்தல் செலவினங்களில் போலி கணக்கு எழுதியதாகவும் டொனால்ட் டிரம்ப் மீது குற்றச்சாட்டு எழுந்தது. சட்டவிரோதமாக ஆபாச நடிகைக்கு பணம் கொடுத்த விவகாரம் குறித்து மன்ஹாட்டன் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையில் இருந்து வருகிறது.

இந்த வழக்கில் ஸ்டார்மி டேனியல்ஸ் உட்பட 22 சாட்சியங்களை அந்நீதிமன்றம் விசாரித்தது. இந்த நிலையில் ஆபாச நடிகைக்கு பணம் கொடுத்த விவகாரத்தில் டொனால்ட் டிரம்ப் குற்றவாளி என தீர்ப்பு வழங்கி உள்ளது. கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் 2 வது முறையாக அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இதற்கிடையே ஆபாச நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கில் டிரம்ப்பு மேல்முறையீடு மனுவை தாக்கல் செய்தார். அந்த மனுவை அமெரிக்க நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேலும் இந்த வழக்கில் தீர்ப்பை 10 ஆம் தேதி அறிவிப்பதாக கூறப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *