செய்திகள்

ஆபரணத் தங்கம் விலை சரவனுக்கு ரூ.136 உயர்வு

சென்னை, ஏப். 7–

ஆபரணத் தங்கத்தின் விலை இன்றும் சவரனுக்கு ரூ.136 உயர்ந்து, ரூ.38,872-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ரஷ்யா-உக்ரைன் இடையேயான போர் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கிடுகிடுவென உயர்ந்து வரும் நிலையில், தங்கம் விலையும் போட்டிபோட்டு அதிகரித்து வந்தது. தங்கம் விலை பிப்ரவரி முதல் வாரத்தில் இருந்து படிப்படியாக உயரத் தொடங்கிய நிலையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை மேலும் உயர்ந்துள்ளது.

இன்றும் ரூ.136 உயர்வு

நேற்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.136 உயர்ந்து, சவரன் ரூ.38,736-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ..4,842-க்கு விற்பனையானது. மேலும் சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.70.70-க்கு விற்கப்பட்டது.

இந்நிலையில், இன்று தங்கம் விலை சற்று உயர்ந்து காணப்படுகிறது. அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.17 உயர்ந்து, ரூ.4,859-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.136 உயர்ந்து ரூ.38,872-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூ.71-க்கும், ஒரு கிலோ ரூ.71,000-க்கும் விற்பனையாகிறது.

Leave a Reply

Your email address will not be published.