செய்திகள்

ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.880 குறைவு

சென்னை, மார்ச் 10–

சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.880 குறைந்து ரூ.39,280 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ரஷ்யா – உக்ரைன் போர் எதிரொலியாக கடந்த சில நாட்களாகவே தங்கத்தின் விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது. சவரன் 40 ஆயிரத்தை எட்டி இல்லத்தரசிகளை அதிர்ச்சிக்குள்ளாகியது. ஆபரணத் தங்கம் விலை, வாரத்தின் முதல் நாளான திங்கள் முதல் விலை ஏற்ற இறக்கத்துடனே இருந்து வந்த நிலையில், இன்று அதிரடியாக சரிவை கண்டிருப்பது இல்லத்தரசிகளை குதூகலத்தில் ஆழ்த்தியுள்ளது.

சவரனுக்கு ரூ.880 குறைவு

அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் 110 ரூபாய் குறைந்து ரூ.4,910 க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.880 குறைந்து ரூ.39,280க்கு விற்பனையாகிறது. சென்னையில் 24 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.5,309 எனவும் ஒரு சவரன் ரூ.42,472 எனவும் விற்பனையாகி வருகிறது.

சென்னையில் தங்கத்தின் விலை போலவே வெள்ளியின் விலை இன்று குறைந்துள்ளது. சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி 2 ரூபாய் 60 காசுகள் குறைந்து, ரூ.74.10 எனவும், ஒரு கிலோ விலை ரூ.74,100 எனவும் விற்பனை செய்யப்படுகிறது. இன்னும் ஒரு சில நாட்களுக்கு தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் தான் இருக்கும் என்றும் நகை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.