செய்திகள்

ஆன்லைன் விளையாட்டுக்கு வழிகாட்டும் நெறிமுறைகள் வெளியீடு

பணத்தை கையாளும் விளையாட்டுக்கு அனுமதி இல்லை

புதுடெல்லி, ஏப்.7-–

ஆன்லைன் விளை யாட்டுக்கான வழிகாட்டும் நெறி முறைகள் வெளியிடப்பட்டன. உண்மையான பணத்தை கையாளும் விளை யாட்டுக்கு அனுமதி இல்லை.

தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து 42க்கும் அதிகமானவர்கள் தற்கொலை செய்துள்ளனர். இதனால் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யும் வகையில் சட்டமசோதா சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. இதற்கு கவர்னர் ஆர்.என். ரவி ஒப்புதல் அளிக்காமல் திருப்பி அனுப்பினார்.

இதையடுத்து 2வது முறையாக ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வ தற்கான சட்டமசோதா நிறைவேற்றப்பட்டு கவர்னர் ஆர்.என். ரவிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இது தற்போது நிலுவையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஆன்லைன் விளை யாட்டுகள் குறித்த இறுதி வழிகாட்டும் நெறிமுறைகளை மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில் நுட்ப ராஜாங்க அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் நேற்று வெளியிட்டார். அப்போது பேசும்போது அவர் கூறியதாவது:-

ஆன்லைன் விளை யாட்டுகள் தொடர்பாக பல்வேறு சுய-ஒழுங்குமுறை அமைப்புகள் (எஸ்.ஆர்.ஓ.) இருக்கும். கட்டமைப்புகள் அடிப்படையில் ஆன்லைன் விளையாட்டுகளுக்கான அனுமதியை அவை முடிவு செய்யும்.

பல்வேறு தனியார் நிறுவனங்கள், சுய ஒழுங்குமுறை அமைப்புக்கான மாதிரியை அளித்துள்ளன. இது குறித்து அவற்றுடன் விவாதிக்கப்படும். சுய ஒழுங்குமுறை அமைப்பினை அரசு அறிவிக்கும். இது தன்னாட்சி அமைப்பாக இருக்கும். நாங்கள் 3 சுய ஒழுங்குமுறை அமைப்புகளுடன் தொடங்குவோம்.

உண்மையான பணத்தை கையாள்கிற ஆன்லைன் விளையாட்டுகளும், பந்தயம் கட்டும் ஆன்லைன் விளையாட்டுகளும் அனுமதிக்கப்படாது.

பணம் சேகரிக்கும் ஆன்லைன் விளை யாட்டுகளுக்கு கே.ஒய்.சி. என்னும் வாடிக்கை யாளர்கள் பற்றிய விதிமுறைகளை பூர்த்தி செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அரசுக்கு எதிராக ஆன்லைனில் அவ்வப்போது தவறான தகவல்கள் வெளியா கின்றன. இது தொடர்பாக மத்திய அரசு நடவடிக்கை எடுக்க உள்ளது. இதுபற்றி மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் கூறும்போது, “ஆன்லைனில் மத்திய அரசு பற்றிய தவறான தகவல்களை வெளியிடும் பிரச்சினையில், மத்திய அரசு ஒரு நிறுவனத்தை எங்கள் அமைச்சகம் மூலம் அறிவிக்க முடிவு செய்துள்ளது. அந்த அமைப்பு, ஆன்லைனில் உள்ள அனைத்து உள்ளடக்க அம்சங்களையும் சரிபார்க்கும்” என தெரிவித்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *