செய்திகள்

ஆன்லைன் வணிக நிறுவனங்களின் பொருட்களை வைக்க சென்னையில் சேமிப்பு கிடங்கு தேவை அதிகரிப்பு

ஆன்லைன் வணிக நிறுவனங்களின் பொருட்களை வைக்க சென்னையில் சேமிப்பு கிடங்கு தேவை அதிகரிப்பு

நெட் பிராங்க் ஆய்வு நிறுவனம் தகவல்

சென்னை, ஜூலை 9–

ரியல் எஸ்டேட் ஆய்வு நிறுவனமாக நெட் பிராங்க் சென்னையில் ஸ்ரீபெரும்புதூர், ஒரகடம், மாதாவரம், செங்குன்றம், பெரியபாளையம், மறைமலை நகர் பகுதிகளில் உள்ள சேமிப்பு கிடங்குகளுக்கு ஆன்லைன் வணிக நிறுவனங்களின் பொருட்களை வைக்க தேவை அதிகரித்துள்ளது என்று ஆய்வில் கண்டறிந்துள்ளது.

இது மட்டுமின்றி பல்வேறு அழகு, உடல் ஆரோக்கிய பொருட்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் தயாரிப்பு நிறுவனங்களுக்கு சேமிப்பு கிடங்குகள் தேவைப்படுகிறது என்று இதன் நிறுவன முதுநிலை டைரக்டர் சீனிவாஸ் அனிக்கிபட்டி தெரிவித்தார்.

பல்வேறு என்ஜினீயரிங் மற்றும் உதிரி பாகங்கள் உற்பத்தி தொழிற்சாலைகள் தங்கள் உற்பத்தியை சேமிக்க, கிடங்குகள் தேவைப்படுகின்றன. இதனால் சென்னையில் சேமிப்பு கிடங்குகளுக்கு கிராக்கி இருக்கும் என்றார் அவர்.

இந்தியாவின் முன்னணி 8 நகரங்களில் சென்னை சேமிப்பு கிடங்குகள் கிராக்கி 2 மடங்காக உயர்ந்துள்ளது. தற்போது உள்ள 24 மில்லியன் சதுர அடி சேமிப்பு கிடங்குகள், 40 மில்லியன் சதுர அடியாக உயர உள்ளது. புனே நகரை போல சென்னையும் வாகன உதிரி பாகங்கள் தயாரிப்பு யூனிட்கள் கொண்டுள்ளதால் சேமிப்பு கிடங்கு தேவை உயரும் என்றார் அவர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *