செய்திகள்

ஆன்லைன் வகுப்புகளை தொடங்கிய உக்ரைன் மருத்துவ பல்கலைக்கழகங்கள்

புதுடெல்லி, மார்ச் 16-

உக்ரைனில் படித்து வந்த இந்திய மாணவர்களுக்குப் புதிய நம்பிக்கை வெளிச்சமாக அந்நாட்டின் பல மருத்துவ பல்கலைக்கழகங்கள் ஆன்லைன் வகுப்புகளைத் தொடங்கியுள்ளன.

டேனிலோ ஹாலிட்ஸ்கி லிவிவ் தேசிய மருத்துவ பல்கலைக்கழகம், இவானோ-பிரான்கிவ்ஸ்க் தேசிய மருத்துவ பல்கலைக்கழகம், வின்னிட்சியா தேசிய பிரோகோவ் மருத்துவ பல்கலைக்கழகம், போகோமேலெட்ஸ் தேசிய மருத்துவ பல்கலைக்கழகம் ஆகியவை நேற்று முன்தினம் முதல் இணையவழி வகுப்புகளைத் தொடங்கின.

தற்போது பெரும்பாலும் மேற்கு உக்ரைனில் உள்ள மருத்துவ பல்கலைக்கழகங்கள் ஆன்லைன் வகுப்புகளை தொடங்கியுள்ள நிலையில், மற்ற பல்கலைக்கழங்களும் இவ்வழியிலான வகுப்புகளை வரும் நாட்களில் துவங்க திட்டமிட்டுள்ளதாக தாயகம் திரும்பியுள்ள இந்திய மருத்துவ மாணவர்கள் தெரிவித்தனர்.

இந்திய மாணவர்களுக்கு ஆறுதல்

ரஷ்யாவின் இடைவிடாத ஏவுகணை தாக்குதல் தொடரும் நிலையில், பல பேராசிரியர்கள் தங்கள் வீடுகள் அல்லது மறைவிடங்களில் இருந்து வகுப்புகளை எடுப்பதாகவும் அவர்கள் கூறினர். தினசரி வகுப்புகளுக்கான அட்டவணையும் அளிக்கப்பட்டுள்ளது.

இப்போதைக்கு மாணவர்களுக்கு இணைய வழியில் தினசரி டெஸ்டும், வாய்மொழித் தேர்வும் நடைபெறுகின்றன.

இணையவழியில்தான் என்றாலும் மீண்டும் படிப்பு தொடங்கியிருப்பது இந்திய மருத்துவ மாணவர்களுக்கு ஆறுதலை தந்திருப்பதை அறிய முடிகிறது.

Leave a Reply

Your email address will not be published.