திருச்சி, மார்ச் 25–
ஆன்லைன் ரம்மியால் தமிழ்நாட்டில் மேலும் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே துப்பாக்கி தொழிற்சாலையில் உள்ள மருத்துவமனையில் பணியாற்றி வந்தவர் ரவிசங்கர். இவர், ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்து, அதனால் ஏற்பட்ட கடன் தொல்லையால், அதிக அளவிலான தூக்க மாத்திரையை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
ஏற்கனவே தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மியால் 41 பேர் தற்கொலை செய்து கொண்ட நிலையில், மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளது தமிழ்நாட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. போலீசார் இது குறித்து வழக்குப் பதிவு செய்து, விசாரணையை தொடங்கியுள்ளனர்.