செய்திகள்

ஆன்லைன் பந்தய செயலி வழக்கு: ஜூலை 21ல் ஆஜராக கூகுள், மெட்டா நிறுவனங்களுக்கு அமலாக்கத்துறை சம்மன்

Makkal Kural Official

புதுடெல்லி, ஜூலை 19–

பணமோசடி மற்றும் பிற நிதி குற்றங்களுக்காக விசாரணையில் உள்ள ஆன்லைன் பந்தய செயலிகளை விளம்பரப்படுத்தியதாக எழுந்த புகாரில், ஜூலை 21ம் தேதி ஆஜர் ஆக வலியுறுத்தி கூகுள், மெட்டாவுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது.

ஐதராபாத் மற்றும் விசாகப்பட்டினத்தில் ‘ஜங்லீ ரம்மி, ஜீட்வின், லோட்டஸ் 365’ உள்ளிட்ட, ‘ஆன்லைன்’ சூதாட்ட செயலிகள் வாயிலாக, சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடப்பதாக புகார் எழுந்தது. அதன் அடிப்படையில் அமலாக்கத்துறையினர் விசாரணை மேற்கொண்ட போது, குறிப்பிட்ட சூதாட்ட செயலிகளின் விளம்பரங்களில் திரைப்பட நட்சத்திரங்கள், இன்ஸ்டா, யு டியூப் பிரபலங்கள் நடித்திருப்பது தெரியவந்தது.அது மட்டும் இன்றி பிரபல நடிகர்கள் விளம்பரத்தில் நடித்ததை நம்பி, சூதாட்ட செயலிகளை பயன்படுத்தி 3 கோடி ரூபாய் வரை பணத்தை இழந்ததாக ஒருவர் புகார் தெரிவித்திருந்தார்.

‘ஆன்லைன்’ சூதாட்ட செயலிகள் விளம்பரத்தில் நடித்த புகார் தொடர்பாக, நடிகர்கள் பிரகாஷ் ராஜ், விஜய் தேவரகொண்டா, ராணா டகுபதி உள்ளிட்ட 29 பிரபலங்கள் மீது அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்தது.

சூதாட்ட செயலிகளை விளம்பரப்படுத்துவதற்கு ஈடாக பெரும் அளவிலான கமிஷன் தொகை பிரபலங்கள் பெறுவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருக்கும் நிலையில், சைபராபாத் காவல்துறையின் முதல் தகவல் அறிக்கை அடிப்படையில் அமலாக்கத்துறையும் வழக்குப் பதிவு செய்து இருந்தது.குற்றம்சாட்டப்பட்டுள்ள பிரபலங்களின் வங்கி பரிவர்த்தனைகள், டிஜிட்டல் பரிமாற்றங்கள் குறித்து அமலாக்கத்துறை ஆய்வு செய்து வருகின்றது.

இந்நிலையில், பணமோசடி மற்றும் பிற நிதி குற்றங்களுக்காக விசாரணையில் உள்ள ஆன்லைன் பந்தய செயலிகளை விளம்பரப்படுத்தியதாக எழுந்த புகாரில், ஜூலை 21ம் தேதி ஆஜர் ஆக வலியுறுத்தி கூகுள், மெட்டாவுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது.

பந்தய விண்ணப்பங்களை விளம்பரப்படுத்த கூகிள் மற்றும் மெட்டா நிறுவனம் இரண்டும் தீவிரமாக உதவியதாக அமலாக்கத் துறை குற்றம் சாட்டியுள்ளது.

மொத்த மோசடி ரூ.6,000 கோடிக்கு மேல் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக பல பாலிவுட் பிரபலங்கள் விசாரிக்கப்பட்டுள்ளனர். இதில் அரசியல் ரீதியாக லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டுகளும் உள்ளன. சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் பூபேஷ் பாகேல் ஆன்லைன் பந்தய செயலியின் விளம்பரதாரர்களிடமிருந்து ரூ.500 கோடிக்கு மேல் பெற்றதாகவும் அமலாக்கத்துறை அதிகாரிகள் குற்றம் சாட்டி உள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *