செய்திகள்

ஆன்லைன் படிப்புக்கு கனடா சாப்ட்வேர் நிறுவனத்துடன் ‘எடூடெக்’ நிறுவனம் கூட்டு முயற்சி

சென்னை, ஆக.1–

இந்தியாவில் பிரபல பள்ளி, கல்லூரிகளுக்கு நவீன கல்வி பயிற்சியை வழங்கும் ‘எடூடெக்’ நிறுவனம், ஆன்லைன் கல்வி வழங்க, கனடா நாட்டு சாப்ட்வேர் நிறுவனமான ‘டி.டூ.எல்’ நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்துள்ளது.

டி டூ எல் ஏற்கனவே ஆசிய கல்வி நிறுவனங்களுக்கு நவீன தொழில் நுட்பம் வழங்கி வருகிறது. டிடூஎல் கூட்டு இதன் சாப்ட்வேர் வசதிகளை விற்பனை செய்யும். சிக்கன கட்டணத்தில் இவை பள்ளி, கல்லூரிக்கு வழங்கப்படும் என்று எடூடெக் டைரக்டர் கே.ஆர்.சஜீவ் தெரிவித்தார்.

டிடூஎல் புதிய தொழில் நுட்பம் இந்திய கல்வி நிறுவனங்களுக்கு எளிதில் அமல்படுத்த முடியும் என்று வணிகத் தலைவர் ஆர்.சந்தோஷ் தெரிவித்தார்.

இந்தியாவில் தற்போது பல்கலைக்கழக கமிஷன் தகவல்படி 200 பல்கலைக்கழகங்கள் ஆன்லைன் பட்டம் வழங்க முடியும். இதற்கு டிடூஎல் நிறுவன பிரைட்ஸ்பேஸ் சாப்ட்வேர் ஏற்றது ஆகும். மணிபால் பல்கலைக்கழகம் ஏற்கனவே டிடூஎல் வாடிக்கையாளராக உள்ளது என்று வணிக இயக்குனர் பிரேம் தாஸ் மகேஸ்வரி தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *