செய்திகள்

ஆன்லைனில் ரூ.15 ஆயிரத்தை இழந்த நடிகர்

Makkal Kural Official

சென்னை, பிப். 24–

ஆன்லைனில் ரூ.15 ஆயிரத்தை ஏமாந்துவிட்டதாக சின்னத்திரை நடிகர் செந்தில் வெளியிட்டுள்ள வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

சரவணன் மீனாட்சி தொடர் மூலம் சின்னத்திரையில் பிரபலமானவர் மிர்ச்சி செந்தில். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். அதோடு சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் அண்ணா தொடரிலும் நடித்து வருகிறார்.

இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தனக்கு தெரிந்த பெரிய தொழிலதிபர் எண்ணில் இருந்து அண்மையில் குறுந்தகவல் ஒன்று வந்தது. அதற்கு பதிலளித்த போது அவருக்கு அவசரமாக பணம் தேவை என்று மற்றொரு குறுந்தகவல் வந்தது. உடனே அவர் அனுப்பிய நம்பரை சரிபார்க்காமல் ரூ.15 ஆயிரம் அனுப்பினேன். அதன்பிறகு, அந்த நம்பரின் பெயரை பார்த்தால், யோகேந்தர் என்று இருந்தது.

சந்தேகம் அடைந்த நான் அந்த தொழிலதிபரை மொபைலில் தொடர்புகொண்டு கேட்டேன். அப்போது அவர் தன்னுடைய வாட்ஸ்-ஆப் ஹேக் செய்யப் பட்டிருப்பதாகவும் அதுகுறித்து புகார் அளித்திருப்பதாகவும் சொன்னார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்தேன். எனவே, யாராவது அவசரம் என்று பணம் கேட்டால், யோசிக்காமல் பணத்தை அனுப்பாதீர்கள். இது சுட்ட கதையல்ல, உண்மையிலே பட்ட கதை என்று தெரிவித்துள்ளார். அவரது இந்த விடியோ, சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *