ஸ்ரீகாகுளம், மே 3–
ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் இச்சாபுரம் அருகே பகுதா ஆற்றின் மீது 70 டன் எடை கொண்ட கல் லாரி சென்றபோது இடிந்து விழுந்தது.
பாலம் இடிந்து விழுந்ததில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை, போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. டிரைவர் மற்றும் கிளீனருக்கு லேசான காயம் ஏற்பட்டது.
இடிந்து விழுந்த பாலம் 1926–ல் பிரிட்டிஷ் காலத்தில் கட்டப்பட்டது.
இச்சாபுரம் அருகே பகுதா ஆற்றின் மீது கட்டப்பட்ட இந்த பாலம் 100 ஆண்டுகள் பழமையானது என கூறப்படுகிறது. பாலம் இடிந்து விழுந்தது குறித்து தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.