போஸ்டர் செய்தி

ஆந்திர மாநிலம் குண்டூரில் பாரத் பெட்ரோலிய நிறுவனத்தின் கடலோர முனையம்: மோடி அடிக்கல்

அமராவதி, பிப். 10–
ஆந்திர மாநிலத்தின் குண்டூரில் பாரத் பெட்ரோலிய நிறுவனத்தின் கடலோர முனையத்துக்கு பிரதார் மோடி இன்று அடிக்கல் நாட்டினார்.
பின்னர் அவர், தேசிய பாரம்பரிய நகர வளர்ச்சி திட்டத்தில் அமராவதி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.
இதன் பின்னர் நடந்த பாரதீய ஜனதா கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகையில்,
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு தேர்தலில் தோற்றுவிடுவோம் என்ற பயம் ஏற்பட்டுள்ளது.
சந்திரபாபு நாயுடு, ஆந்திராவை நிர்வாகம் செய்யாமல், என்னை விமர்சிக்கிறார். ராமாராவுக்கு சந்திரபாபு மரியாதை அளித்தாரா? சந்திரபாபு நாயுடு தனது மாமனாரை ஏமாற்றியவர். ராமாராவ் வகுத்து தந்த பாதையிலிருந்து விலகி விட்டார். ஆந்திராவில் காங்கிரசை அகற்ற வேண்டும் என ராமாராவ் விரும்பினார். சந்திரபாபு யாரை விமர்சித்தாரோ, அவர்களுடனே கூட்டணி வைத்து உள்ளார். இன்று ராமாராவ் இருந்திருந்தால் வேதனை அடைந்து இருப்பார்.
அவர் என்னை விட சீனியர் என்பதை யார் மறுத்தது. அவர் முகாமை மாற்றுவதிலும் சீனியர். சந்திரபாபு, வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் தவறு இழைத்து விட்டார். ஏழை தாயின் மகனால், சந்திரபாபுவுக்கு தூக்கம் வருவது இல்லை. தனது மகன் வளர்ச்சி பெறவே அவர் விரும்புகிறார். சந்திரபாபு தொடர்ந்து இரண்டு முறை வெற்றி பெற்றது கிடையாது. சந்திரபாபுவுக்கு தோல்வி பயம் ஏற்பட்டு உள்ளது.
டெல்லியில் போட்டோவுக்கு போஸ் கொடுக்க செல்கிறார். பொது மக்களின் பணத்தை தனது அரசியல் கூட்டத்திற்கு பயன்படுத்தி வருகிறார். ஆனால், இந்த நிகழ்ச்சி பாரதீய ஜனதா சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது. என்னை டெல்லி சென்று அமர வேண்டும் என தெலுங்கு தேசம் கூறுவது மகிழ்ச்சியாக உள்ளது. ஆந்திர மக்கள் ஆசிர்வதித்து என்னை மீண்டும் ஆட்சியில் அமர்த்துவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *