செய்திகள்

ஆந்திராவில் 7 ஆயிரம் போலி ஆதார் அட்டைகளை தயாரித்தவர் கைது

ஐதராபாத், மே 21–

ஐதராபாத்தில் 7,000 போலி ஆதார் அட்டைகளை தயாரித்தவரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர்.

இதுகுறித்து ஐதராபாத் சைபர் கிரைம் பிரிவு எஸ்பி ஜிதேந்திர சிங் கூறி இருப்பதாவது:–

சுக்லியா பகுதியைச் சேர்ந்த பவன் கோட்டியா என்பவர் சில நாட்களுக்கு முன்பு ஐதராபாத்தில் அவருக்கும் அவரது கூட்டாளிகளுக்கும் எதிராக பதிவு செய்யப்பட்ட இரண்டு வழக்குகள் தொடர்பாக தப்பி ஓடிவிட்டார். பவனை தேடும் பணியில் ஈடுபட்டிருந்த நிலையில், 8 குற்றவாளிகளை ஐதராபாத் போலீசார் கைது செய்தனர்.

7 ஆயிரம் போலி ஆதார்

இதனைத்தொடர்ந்து ஒரு ரகசிய தகவலின் பேரில், சைபர் செல் குழு பவனை கைது செய்தது. விசாரணையின் போது, குற்றம் சாட்டப்பட்டவர் ஷிவ்புரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்றும், சில ஆண்டுகளாக நகரத்தில் தங்கியிருப்பதாகவும் அதிகாரிகளுக்குத் தெரிவித்தார். இவர் கடந்த 2011ஆம் ஆண்டு முதல் ஆதார் அட்டை தயாரிக்கும் ஆபரேட்டராக பணியாற்றி வந்ததாகவும் தெரிவித்தார்.

பவன் தனது நண்பர் ரோஹித்துடன் இணைந்து 2016ஆம் ஆண்டு முதல் மத்தியபிரதேசம், அசாமில் ஆதார் அட்டைகளைத் தயாரிப்பதற்கான தொழில்நுட்ப உதவி வழங்கினார். பின்னர் ஐதராபாத்தைச் சேர்ந்த நண்பர்களோடு போலி ஆதார் தயாரிக்கத் தொடங்கி, இதுவரை 7000 போலி ஆதார் கார்டுகளை தயாரித்துள்ளதாக ஐதராபாத் காவல்துறையிடம் குற்றம்சாட்டப்பட்டவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.