செய்திகள்

ஆந்திராவில் 2 கார்கள் மோதி 2 குழந்தைகள் உள்பட 5 பேர் பலி

Makkal Kural Official

அமராவதி:  நவ. 29–

ஆந்திராவில் இரண்டு கார்கள் மோதி ஏற்பட்ட விபத்தில், 2 குழந்தைகள் உள்பட 5 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஆந்திராவின் கர்னூல் மாவட்டத்தில் உள்ள கோடேகல் கிராமத்தில், இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், உள்ளூர் மக்கள் உதவியுடன் நீண்ட நேரம் போராடி மீட்பு பணி மேற்கொண்டனர். இந்த விபத்தில், 2 குழந்தைகள் உள்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இவர்கள் கர்நாடகா மாநிலத்தை சேர்ந்தவர்கள் ஆவர்.

மேலும் இரண்டு பேர் காயம் அடைந்தனர். இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. இந்த விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த விபத்து அதிகாலை 4.30 மணியளவில் நிகழ்ந்துள்ளது. நள்ளிரவு நேரம், அதிகாலையில் வாகன பயணத்தை தவிர்ப்பது நல்லது. வாகனம் ஓட்டுபவர், தூக்க கலக்கத்தில் சற்று அசந்தாலும் பெரும் விபத்தில் சிக்க வாய்ப்புள்ளது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த விபத்து அதிகாலை நேரத்தில் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும் என்பதை உணர்த்துகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *