செய்திகள்

ஆந்திராவில் செம்மரம் கடத்திய 13 பேர் கைது

ரூ.50 லட்சம் செம்மரக் கட்டைகள் பறிமுதல்

திருப்பதி, செப். 23–

திருப்பதி அருகே பல்வேறு இடங்களில் மேற்கொண்ட சோதனையில் செம்மரம் கடத்திய 13 பேர் கைது செய்யப்பட்டு சுமார் ரூ.50 லட்சம் மதிப்பிலான செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

திருப்பதி செம்மர கடத்தல் தடுப்பு பிரிவு டிஐஜி செந்தில் குமார் உத்தரவுன்படி, திருப்பதி செம்மர கடத்தல் தடுப்பு போலீசார் தீவிர கண்காணிப்பை மேற்கொண்டனர். இந்த கண்காணிப்பில், திருப்பதி அடுத்த வாக்ரா பேட்டை மலைப்பாதையில் ஒரு கும்பல் செம்மரக்கட்டைகளை கடத்திச் சென்றதாக தெரிய வந்ததை அடுத்து, போலீசார் விரைந்து சென்று அந்த கும்பலை சுற்றி வளைத்தனர்.

13 பேர் கைது

அப்பொழுது அந்த கும்பல் செம்மரங்களை விட்டு விட்டு தப்பிச் சென்றனர். தப்பியோடிகளில் ஒருவரை செம்மர கடத்தல் தடுப்பு போலீசார் விரட்டி பிடித்துள்ளனர். அதேபோல், பாலப்பள்ளி வன சரகத்தில் கங்கைமேடு வனப்பகுதியில் மற்றொரு கும்பலை பிடிக்க சென்ற போது அனைவரும் தப்பிச் சென்றுள்ளனர். அப்பகுதியில் இருந்து 16 செம்மரக்கட்டைகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளதாக தெரிய வருகிறது.

காளஹஸ்தி மண்டல மேல்சூறு வனப்பகுதியில் உள்ள வல்லம் பகுதியை போலீசார் தீவிர வாகன தணிக்கை செய்து கொண்டிருக்கும் பொழுது, அந்த வழியாக வந்த டெம்போ ஆட்டோவில் வந்தவர்கள் போலீசாரை கண்டதும் தப்பியோட முயன்றனர்.

போலீசார் விரட்டி சென்று பிடித்த போது டெம்போவில் பயணம் செய்த 13 பேர் செம்மர கடத்தலில் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும் அவர்களிடமிருந்து 23 செம்மரக்கட்டைகள், கோடரிகள், ரெம்போ ஆட்டோ ஆகியவற்றை செம்மர கடத்தல் தடுப்பு போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட செம்மரக்கட்டைகளின் மதிப்பு சுமார் 50 லட்சம் இருக்கும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.