பயணிகள் காயமின்றி உயிர் தப்பினர்
கூடூர், நவ. 18–
அகமதாபாத்தில் இருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த நவஜீவன் எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஆந்திரம் அருகே திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
நேற்று அகமதாபாத்தில் இருந்து சென்னைக்கு நவஜீவன் விரைவு ரெயில் கிளம்பியது. நேற்றிரவு ஆந்திரம் மாநிலம் கூடூர் அருகே வந்துகொண்டிருந்த போது அந்த ரெயிலில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. உணவு தயாரிக்கும் பெட்டியில் இருந்து புகை வந்துள்ளது. இதை பார்த்த பயணிகள் அலறினர். உடனடியாக ரயில்வே அதிகாரிகள் கூடூர் சந்திப்பில் ரயிலை நிறுத்தி, தீயை அணைத்து பெரும் விபத்தைத் தடுத்தனர். இதனால் பயணிகள் எந்தவித காயமுமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
நவஜீவன் விரைவு ரெயில் கூடூர் ரெயில் நிலையத்தில் சுமார் ஒரு மணி நேரம் நிறுத்தப்பட்டு பின்னர் கிளம்பி சென்றனர்.