செய்திகள்

ஆதார், பான் எண் இணைப்புக்கு மார்ச் 31 வரை கால நீட்டிப்பு

டெல்லி, ஜூலை 7-

பான் மற்றும் ஆதார் எண் இணைப்புக்கு அடுத்த ஆண்டு மார்ச் 31-ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப் பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதனால், ஊரடங்கு கடந்த மார்ச் மாதம் முதல் அமலில் உள்ளது. இதைத்தொடர்ந்து, தற்போது சில தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில், வரி மற்றும் கட்டணம் செலுத்துவதற்கு கால அவகாசத்தை மத்திய அரசு நீட்டித்து வருகிறது. நேற்று மத்திய நேரடி வரிகள் வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பான் கார்டை, ஆதார் அட்டையுடன் இணைப்பதற்கான கால அவகாசம் அடுத்தாண்டு மார்ச் 31 ம் தேதி வரையில் நீட்டிக்கப்படுவதாக அறிவித்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *