டோக்கியோ, செப். 11
ஆண் குழந்தைகளை உருவாக்கும் பாலின குரோமசோம்களில் ஒன்றான ‘ஒய்’ குரோமோசோம்கள் மறைந்துவிடும் வாய்ப்புள்ளது என்று ஜப்பானின் தேசிய அறிவியல் அகாடமி தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தேசிய அறிவியல் அகாடமியின் செயல்முறைகளின்படி வெளியிடப்பட்ட புதிய ஆய்வில், மனிதர்களில் உள்ள இரண்டு பாலின குரோமோசோம்களில் ஒன்றான Y குரோமோசோம் மறைந்துவிடும் வாய்ப்பூள்ளது என்று கூறியுள்ளது. ஆண்களுக்கான இனப்பெருக்க உறுப்புகள், ‘ஒய்’ குரோமோசோம் மூலம்தான் கிடைகின்றது. அப்படிப்பட்ட ‘ஒய்’ குரோமோசோம் அழிந்துவிட்டால், இனி ஆண் குழந்தைகளே பிறக்காதா என்ற அதிர்ச்சிக் கேள்வியை, ஜப்பானிய ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை கேட்க வைக்கிறது.
ஒய் குரோமோசோம் மறையுமா?
ஹொக்கைடோ பல்கலைக்கழகத்தில் அசடோ குரோய்வா தலைமையிலான ஆராய்ச்சியாளர்கள் ஸ்பைனி எலிகளில் உள்ள பெரும்பாலான Y குரோமோசோம் மரபணுக்கள் மற்ற குரோமோசோம்களுக்கு இடம் பெயர்ந்திருப்பதைக் கண்டறிந்தனர். இந்த குரோமோசோமின் முழுமையான மறைவு எதிர்காலத்தில் ஆண் சந்ததியின் முடிவைக் குறிக்கும் என்கிறார்கள். இது குறித்து அந்த ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
மேலும் குரோமோசோம் என்றால் என்ன, டிஎன்ஏ என்றால் என்ன, ஜீன் என்றால் என்ன, மனித உடல் எப்படி உருவாகிறது என்பதையும் இந்த வீடியோவில் விளக்கப்பட்டுள்ளது.