சிறுகதை

ஆண்கள் தேவை – ராஜா செல்லமுத்து

எல்லா சமூக வலைதளங்களிலும் சுரேஷ் ரொம்பவே ஆக்டிவாக இருப்பான்.

பேஸ்புக்,டுவிட்டர் whatsapp என்று 24 மணி நேரமும் அவன் இருப்பு குறையாமல் இருக்கும். அதனால் எந்த செய்திகளும் அவன் பார்வைக்கு எட்டாமல் போவதில்லை .

ஒரு நாள் டுவிட்டரில் வந்த ஒரு செய்தியை பார்த்து மிரண்டு போய் நின்றவனுக்கு அந்த செய்தியில் ஒரு ஆச்சரியம் கலந்திருந்தது. இது உண்மையாக இருக்குமா ?இல்லை இந்தச் செய்தியை அனுப்பிவிட்டு அதற்கு பின்னால் வேறு எதுவும் பெரிய சூழ்ச்சியை தோண்டி இருப்பார்களா? என்றெல்லாம் ஆராய்ச்சி செய்ய ஆரம்பித்தான் சுரேஷ்.

அவனைப் போலவே அந்தச் செய்தியை படித்தவர்கள் அதன் பின்புலத்தில் இருக்கும் ஆபத்தை அலசி ஆராய்ந்தார்கள். ஒரு சில அவசர மனிதர்கள் யோசிக்காமல் தங்கள் பெயர், முகவரி, வயது என்று அத்தனையும் அனுப்பி வைத்தார்கள்.

ஆனால் சுரேஷ் மாதிரியான மனிதர்கள் அந்த செய்தியின் பின்னால் இருக்கும் ஆபத்தை அலசி ஆராய ஆரம்பித்தார்கள்.

தன் நண்பன் கர்ணனிடம் சுரேஷ் இது பற்றி விவாதித்தான்.

கர்ணன் இது உண்மையாக இருக்குமா? இல்லை வேறு எதற்காவது இந்த செய்தியைப் பகிர்ந்து இருக்கிறார்களா? இதனால் எத்தனை மனிதர்கள் பாதிக்கப் போகிறார்கள்? ஆசை தான் ஒரு மனிதன் துன்பத்திற்கு காரணம் ? என்று ஏன் இவர்கள் நம்பால் இருக்கிறார்கள்? ஏன் உணர மறுக்கிறார்கள்?

நம் போன்ற மனிதர்கள் இந்தச் செய்தியை ஆராய்ச்சி செய்து இதில் இருக்கும் நன்மை தீமைகளைத் தெரிந்து கொண்டு தான் அனுப்ப வேண்டும்.

ஆனால் சில மனிதர்கள் அதைச் செய்யாமல், அதன் பின்னால் வரும் பிரச்சினைகளை தெரியாமல் எப்படி எதிர்கொள்ளப் போகிறார்கள் என்றான் சுரேஷ் .

சுரேஷ் நீ சொல்றது உண்மைதான். ஒரு சமூக வலைத்தளத்தில எவ்வளவு தைரியமா இதப் போடுவாங்க. அதுக்கு எவ்வளவு துணிச்சல் இருக்கு? அதுவும் ஒரு பெண் வெளிப்படையா இப்படி எல்லாம் பேசுவாங்களா? இதுல எது உண்மையா இருக்கும்? என்று கர்ணனும் தன் பங்குக்கு சொன்னான் .

அந்தக் கர்ணன் கேள்விக்குப் பதில் சொல்லவே இல்லை.

ஆனால் அந்த சமூக வலைதளத்தில் வந்த அந்தச் செய்தியைப் பார்த்து நூற்றுக்கணக்கான மனிதர்கள் விண்ணப்பித்திருந்தார்கள். அந்தச் செய்தி என்ன? என்று கர்ணனும் சுரேஷும் பேசிக் கொண்டிருந்தபோது ஒருவர் அது என்ன என்ற கேள்வி கேட்டு முன்வந்து நின்றார் பாலா.

சொல்லுங்க சுரேஷ் அப்படின்னு கேள்வி? ஏன் மத்தவங்கள மேல அக்கறைப்படுகிறீங்க? அது உண்மையா இருக்குமா அப்படின்னு ஏன் நம்புறீங்க? என்று வந்த பாலா கேட்டபோது

உங்களுக்கு அந்தக் கேள்விய சொல்றது தப்பு இல்ல. ஏன்னா நீங்களும் ஏமாந்துட கூடாது என்று அந்தக் கேள்வியைச் சொல்ல ஆரம்பித்தான் சுரேஷ்.

ஒன்னும் இல்லைங்க. ஒரு பெண் இந்தக் கோடைவிடுமுறையில் டூர் பாேறதுக்கு என் கூட வர ஒரு ஆண் நண்பர்கள் தேவை. செலவு, தங்குமிடம் இலவசம்னு அனுப்பி வச்சிருக்காங்க.

கூட வர்றவங்களுக்கு அவங்களே செலவழிக்கவும் ஆசைப்படுறாங்க . அத ரொம்ப பகிரங்கமா பாெது வெளியில சொல்றாங்க.. என்னுடன் வர விருப்பம் இருக்கும் நண்பர்கள் என்னைத் தொடர்பு கொள்ளலாம்; அப்படின்னு போட்டு இருக்காங்க. இதுல ஏதோ ஒரு சூழ்ச்சி இருக்குன்னு நான் ஆராய்ச்சி செய்ய ஆரம்பிச்சேன். ஆனா நிறையப் பேர் எந்த ஆராய்ச்சியும் செய்யாம அந்தக் கேள்விக்கும் பதில் சொல்லி இருக்காங்க. அதனுடைய உண்மையான நிலவரத்தையும் பிரச்சனையும் இப்பதான் ஒருத்தர் என்கிட்ட சொன்னார் .

மாேசடி பண்றதுக்கு இப்படியும் ஒரு வழி இருக்கான்னு நான் தெரிஞ்சுகிட்டேன் என்று சொன்ன போது சுரேஷின் செல்போன் அலறியது.

ஹலோ சொல்லுங்க என்று பேசினான் சுரேஷ்.’ எதிர் திசையில் இருந்தவன்

சார் நான் பேராசைப்பட்டு ஒரு பெண் என் கூட விருப்பமுள்ள ஆண் நண்பர்கள் தொடர்பு கொள்ளலாம் அப்படின்னு ஒரு செய்தியப் பாத்தேன்.

அதில போன் நம்பர் போட்டு இருந்தாங்க. அதுக்கு தொடர்பு கொண்ட நான் பேசியதப் பதிவு பண்ணி வச்சிட்டு இப்ப ஒரு லட்ச ரூபா கொடுத்தா தான் இந்தப் பதிவ அழிப்பேன். இல்ல நீங்க பேசின ரெக்கார்டர் உங்க வீட்டுக்கு அனுப்புவேன்னு மிரட்டி எங்கிட்ட பணம் வாங்கிட்டாங்க.

என்கிட்ட மட்டும் இல்ல. என்ன மாதிரி சபலப் புத்தி உள்ள நிறைய ஆண்கள் கிட்ட நிறைய பணத்தைக் கரந்து இருக்காங்க. இது ஒரு விதமான நூதன திருட்டு. இது எங்க போயி நான் எப்படி வெளியே சொல்ல முடியும்? என்னோட மானம் பாேயிரும்.ஒரு லட்ச ரூபாவாேட போச்சேன்னு நம்ம மரியாதயா விட்டுட்டேன். திரும்பவும் இத வச்சு என்ன பிளாக்மெயில் பண்ணினா நீங்க தான் காப்பாத்தணும் என்று முறையிட்டான், ஒரு நபர்.

செல்போனில் ஒருவர் பேசி முடித்து வைப்பதற்குள் சுரேஷுக்கு இன்னொரு போன் வந்தது. அவரும் அந்தப் பெண்ணால் ஏமாற்றப்பட்டது, பணம் பறிபோனதைப் பற்றியே பேசினார்.

சரி பயப்படாதீங்க சமாளிக்கலாம் தைரியமா இருங்க என்று பதில் சொன்னான் சுரேஷ்.

அடுத்தடுத்து இது பற்றிய புகார் போன் கால்கள் சுரேஷுக்கு வந்து கொண்டே இருந்தன. அத்தனைக்கும் பதில் சொல்லிக் கொண்டிருந்தான் சுரேஷ்.

ஒரு கட்டத்தில் யார் இந்தத் தகவலை சமூக வலைதளத்தில் பகிர்ந்து பரபரப்பை ஏற்படுத்தியது. இது உண்மையான பெண்ணாக இருக்குமா? என்று சோதனை செய்து பார்த்ததில் பெண் போல இருந்த ஒரு ஆண் தான் இந்த மோசடிச் செய்தியைப் போட்டு பண மோசடி செய்திருக்கிறான் என்பதை சுரேஷ் தெரிந்து காெண்டான்.

இதைப் பற்றி அறிந்து கொள்ளாமல் புரிந்து கொள்ளாமலும் வேக வேகமாக நான் வருகிறேன், நான் வருகிறேன் என்று பதிவு செய்தவர்கள் பணத்தை இழந்து நின்று காெண்டிருந்தார்கள்.

இது பாேன்ற நிறைய போன் கால்களுக்கு பதில் சொல்லிக் கொண்டிருந்தான் சுரேஷ்.

பெண் பெயரில் இருந்த அந்த ஆண் பெரிய தாெகையைத் சுருட்டிக் காெண்டு, மறுபடியும் உடன் வர ஆண் நண்பர்கள் தேவை என்ற வாசகத்தை மேலும் சில சமூக வலைதளங்களில் பகிர்ந்தான் பெண் பெயரில் இருக்கும் ஓர் ஆண்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *