சிறுகதை

ஆட்டோ அபராதம் – ராஜா செல்லமுத்து

வைரவனுக்கு எழுதப் படிக்கத் தெரியாது. ஆனால் பணத்தை மட்டும் எப்படி கணக்கு கூட்டிக் கொடுக்கிறார் வாங்குகிறார் என்பது வைரவனுக்கு மட்டும் அல்ல அப்பகுதியில் உள்ள எழுதப் படிக்கத் தெரியாத அத்தனை பேருக்கும் அத்துபடி.

ஒன்று, இரண்டு என்று எழுதச் சொன்னால் தெரியாத நபர்கள் எவ்வளவு பணத்தையும் ஈசியாக எண்ணி கணக்குப் பார்த்து விடுகிறார்கள் என்பது விஞ்ஞான உலகத்திற்கே ஒரு வியப்பு. வைரவனும் அப்படித்தான் .

ஆட்டோ ஏறுகிறவர் இறங்குகிறவர் கொடுக்கும் பணத்தை அவ்வளவு லாவகமாக கொஞ்சம் கூட பிசுரு இல்லாமல் கணக்குப் பார்த்துக் கொடுப்பதில் வல்லவன்.

இரவு நேரங்களிலும் கூட ஆட்டோவை இயக்குவார். மனைவி குழந்தைகள் அண்ணன் தம்பிகள் என்று இருந்தாலும் ஓய்வு கிடைக்கும் நேரங்களில் எல்லாம் ஆட்டோவை ஓட்டிக்கொண்டு தான் இருப்பான் .

அதுவும் சொந்த ஆட்டா என்பதால் எப்போதும் ஓட்டலாம் என்ற எண்ணம் அவனுக்கு இருந்தது .

எப்போதும் போல ஒரு நாள் அவன் ஆட்டாே ஓட்டிக்கொலண்டு போகும் போது விதிமுறைகளை மீறி விட்டதாக ஒரு பிரதான சாலையில் போக்குவரத்து காவலர்கள் அவரை வழிமறித்தார்கள்.

அவனிடம் லைசன்ஸ் ஆர்சி புக் இன்சூரன்ஸ் என்று எல்லாவற்றையும் கேட்டார்கள். அவனிடம் இன்சூரன்ஸ் மட்டும் இல்லாமல் இருந்தது.

ஏன் இன்சூரன்ஸ் இல்ல என்று கேட்டபோது ,அதா பிரீமியம் கட்டல; இந்த வாரம் கட்டிடுவேன் என்று மன்றாடினான்.

காவல்துறை போக்குவரத்தில் மட்டும் பிடிவாதமாகக் காறாராக இருக்கிறாகள்.

கொலைக் குற்றவாளிகளை ஓடி ஓடி பிடிப்பது போல் ஹெல்மட் அணியாதவர்கள் லைசென்ஸ் இன்சூரன்ஸ் கொண்டு வராதவர்களை பிடித்து பைன் போடுவதிலும் தண்டிப்பதிலும் குறியாக இருக்கிறார்கள்.

அன்று பைரவன் மாட்டிக் கொண்டான். அவனிடம் இன்சூரன்ஸ் கொண்டுவராததற்கான அபராத தொகையைக் கேட்டார்கள். அவன் இன்சூரன்ஸ் எடுத்து விடுகிறேன்; அபராதம் செலுத்த முடியாது என்று சொன்னான்.

வண்டியை பறிமுதல் செய்வதாக சொன்னதும் வேறு வழியின்றி அபராதத் தொகையை செலுத்தினான். ரசீதை அவனிடம் கொடுத்தார்கள். பணத்தை மட்டுமே சரியாக எண்ணும் பழக்கம் உடைய வைரவனுக்கு அபராதத் தொகை போட்டு கிழித்துக் கொடுத்த சீட்டில் என்ன எழுதி இருக்கிறது? என்று அவனால் வாசிக்க முடியவில்லை.

வைரவனை ஆட்டோ எடுத்துப் போகச் சொன்னார்கள். தனக்கு நடந்த விவரத்தை தன் தம்பியிடம் சொன்னான் வைரவன்.

எவ்வளவு அபராதம் போட்டார்கள் என்று கேட்டான் தம்பி

அந்தத் தொகையை சொல்லிவிட்டு அதைக் கொடுத்ததும் ரசீது கிழித்து கொடுத்ததாகவும் சொன்னான் வைரவன்.

சரி அவர்கள் கொடுத்த ரசீதை எனக்கு வாட்ஸ் அப்புக்கு அனுப்பு என்றான் வைரவனின் தம்பி .

அவன் சொன்னபடியே வாட்ஸ் அப்பில் அனுப்பினான் வைரவன்.

என்ன ஒரு ஆச்சரியம். அந்தப் போக்குவரத்துக் காவலர்கள் அடித்துக் கொடுத்த ரசீது not paid என்று இருந்தது. அபராதத் தொகையும் வசூலித்துக் கொண்டு not paid என்று எழுதிக் கொடுத்திருக்கிறார்கள்.

என்ன இது? என்று கேட்டபோது வைரவனுக்கு வாசிக்க தெரியவில்லை என்றான்.

பணத்தை மட்டும் சரியாகக் கூட்டி கழிக்கத் தெரிந்த வைரவனுக்கு அபராதம் வசூலித்த ரசீதில் என்ன எழுதியிருக்கிறது என்பது தெரியவில்லை.

போக்குவரத்து காவல் அலுவலகத்திற்குச் சென்று நடந்த விஷயத்தை சொன்னான். பணத்தையும் வசூலித்துக் கொண்டு not paid என்று எழுதி இருக்கிறார்கள். என்ன சார் ? உங்க சட்டம் ? என்று கேட்டபோது

எந்த இடத்தில் எந்த காவலர்கள் பணத்தை வசூலித்தார்கள் என்று கேட்டார் உயர் அதிகாரி .

அந்த இடத்திற்கு கூட்டிட்டு போனான் வைரவன்.

ஹெல்மெட் அணியாதவர்களை விரட்டி விரட்டி பிடித்த அந்தக் காவலர்கள் படித்தவர்களுக்கு ஒரு ரசிதும் படிக்காதவர்களுக்கு ஒருரசீதும் என்று எழுதிக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.

அப்போது பாெறி வைத்துப் பிடித்த உயர் அதிகாரி பணத்தை வசூலித்த அந்த பொய் அதிகாரிகளை Left right வாங்கியதோடு ஆறு மாதத்திற்கு சஸ்பெண்டும் செய்தார்.

இதைப் பார்த்த வைரவனுக்கு கொஞ்சம் மகிழ்ச்சி .

சார் எல்லாத்தையும் சரியா வையுங்க. .அப்படி வச்சீங்கன்னா உங்களை யாரும் எதுவும் கேட்க முடியாது. நாம தவறு செய்றதுனால தான் இந்த மாதிரி தப்பான ஆளுக தவறான செயலை செய்றாங்க என்று அந்த உயரதிகாரி சொல்லிவிட்டுப் புறப்பட்டார்.

பணத்தை மட்டுமே சரியாகக் கூட்டிக் கழிக்க தெரிந்த வைரவன் இப்போது எழுத்துக்களையும் வாசிக்க வேண்டும் என்று இரவு பள்ளியில் சேர்ந்தான்.

அன்று முதல் அவரின் இரவு ஆனா ஆவன்னாவில் ஆரம்பித்தது.

யாராவது ஏன் இந்த வயதில் படிக்கிறீர்கள்? என்று கேட்டால்,

தான் செலுத்திய ஆட்டோ அபராதத்தை தான் அவன் ஆதாரமாக சாெல்கிறான்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *