ஹாங்சோ, செப். 30–
46 நாடுகள் பங்கேற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் 204 பதக்கங்களுடன் சீனா முதலிடத்தை பெற்றுள்ள நிலையில் 34 பதக்கங்களுடன் இந்தியா 4 வது இடத்தை தக்க வைத்துக்கொண்டுள்ளது.
சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெறும் 19 வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் 46 நாடுகள் பங்கேற்றுள்ளன. இந்திய அணி சார்பில் மொத்தம் 655 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். அக்டோபர் 8 ந்தேதி வரையில் 15 நாட்கள் நடைபெறும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் 8 வது நாளில் மதியம் 1.30 மணி வரையில், இந்தியா 8 தங்கம், 13 வெள்ளி, 13 வெங்கலப் பதக்கங்கள் என மொத்தம் 34 பதக்கங்களை வென்று, புள்ளிப் பட்டியலில் 4 வது இடத்திற்கு முன்னேறி உள்ளது.
ஜப்பான், தென்கொரியா 2, 3 வது இடம்
இந்த பட்டியலில் சீனா 106 தங்கப் பதக்கம், 65 வெள்ளி, 33 வெண்கலப் பதக்கம் என மொத்தம் 204 பதக்கங்களை வென்று, புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. ஜப்பான் 28 தங்கம், 35 வெள்ளி, 37 வெண்கலம் என மொத்தம் 100 பதக்கங்கள் வென்று 2 வது இடத்திற்கு முன்னேறிய நிலையில், தென்கொரியா 27 தங்கம், 28 வெள்ளி, 51 வெண்கலம் என 106 பதக்கங்கள் வென்று 3 வது இடத்தை பெற்றுள்ளது.
இந்தியா 34 பதக்கங்களுடன் 4 வது இடத்தில் உள்ள நிலையில், தாய்லாந்து 8 தங்கம், 3 வெள்ளி, 9 வெண்கலம் என மொத்தம் 20 பதக்கங்கள் வென்று 5 வது இடத்தை பெற்றுள்ளது. உஸ்பெக்கிஸ்தான் 7 தங்கம், 10 வெள்ளி, 15 வெண்கலம் என 32 பதக்கங்கள் வென்று 6 வது இடத்தையும், தைபே 7 தங்கம், 8 வெள்ளி, 9 வெண்கலம் என 24 பதங்கங்களுடன் 7 வது இடத்தையும், ஹாங்காங் 5 தங்கம், 13 வெள்ளி, 18 வெண்கலம் என 36 பதக்கங்களுடன் 8 இடத்தையும், ஈரான் 3 தங்கம், 10 வெள்ளி, 11 வெண்கலம் என 24 பதக்கங்களுடன் 9 வது இடத்தையும், வட கொரியா 3 தங்கம், 6 வெள்ளி, 4 வெண்கலம் என 13 பதங்கங்களுடன் 10 வது இடத்தையும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.