7ந் தேதி முதல் 11ந் தேதி வரை நடைபெறுகிறது
சென்னை, ஜன 4–
சென்னையில் இம்மாதம் 7ந் தேதி முதல் 11ந் தேதி வரை ஆசிய நாடுகளுக்கிடையேயான படகுப் போட்டிகள் நடைபெறுகிறது. முதல் நாள் 6ந் தேதி காலை 4.30 மணிக்கு விழா துவங்குகிறது.
இந்தியாவின் 2வது பழமையான ரோயிங் கிளப்பான (மெட்ராஸ் போட் கிளப்பின்) 81 வது பதிப்பு இது.
பல பிரிவுகளில் நடத்தப்படும் இந்தப்படகு போட்டிகள் மிக சவாலனவை. பங்கேற்கும் குழுவினர், 2-3 நிமிடங்களுக்குள் முடிந்துவிடும் இந்தப் போட்டிகளுக்கு மிக கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டு தயாராகிக் கொண்டிருக்கின்றனர். பல விதமான போட்டிகளும் அதற்கான பரிசு கோப்பைகளும் அவர்களுக்காக காத்திருக்கின்றன.
இந்தப்போட்டிகளில் பங்கேற்பவர்களையும் தலைமை விருந்தினர்களையும் இருபுறங்களிலிருந்து வரிசையில் தங்கள் துடுப்புகளை தூக்கிப்பிடித்து ஒரு வரவேற்பு கூடாரத்தை அமைப்பது, போட்டிகளுக்கிடையே போடகளிலிருந்த வண்ணமே கயிறு இழுக்கும் போட்டி போன்ற அம்சங்களும் பார்வையாளர்களைக் கவரும்.
ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் இந்திரபாலன் துவக்கி வைக்கிறார். பாரம்பரிய சின்னங்களில் ஒன்று மெட்ராஸ் போட் கிளப். 1867-ல் தொடங்கபட்ட இந்த படகு குழாம் இன்றும் அடையார் நதிக்கரையில் சிறப்பாக இயங்கி வருகிறது.
போட் கிளப் அதன் உறுப்பினர்களுக்கும், ஆர்வலர்களுக்கும் படகு ஓட்டும் பயிற்சி, அதில் திறன் வளர்க்கும் முறைகளை தகுந்த ஆசிரியர்கள் மூலம் கற்பித்து அவர்களுக்கிடையே போட்டிகள் நடத்தி ஊக்குவிக்கிறது 157 ஆண்டுகளுக்கும் மேலாக இதுபோல் இந்தியாவில் புனே, கல்கத்தா மற்றும் சில நகரங்களிலும் கிளப்புகள் இயங்குகின்றன.
இந்த கிளப்பை போல உலகின் பல நாடுகளில் இயங்கும் போட் கிளப்புகளின் – ஆசியா பகுதியின் இந்தியா, இலங்கை, பாக்கிஸ்தான், ஹாங்காங், சிங்கப்பூர், மற்றும்பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளைக் கொண்ட 17 கிளப்புகளை உள்ளடக்கியது ஃபார் ஈஸ்டர்ன் அமெச்சூர் ரோயிங் அசோசியேஷன் (FEARA) என்ற கூட்டமைப்பு 1933லில் இருந்து இயங்கும் இந்த அமைப்பு தங்கள் கிளப்புகளுக்கிடையான படகு போட்டியை எதாவது ஒரு நாட்டின் நகரிலிருக்கும் போட் கிளப்பில் நடத்தும். இந்த ஆண்டு அந்த போட்டியை நடத்தும் வாய்ப்பு மெட்ராஸ் போட் கிளப்புக்கு கிடைத்திருக்கிறது. இந்தப் போட்டிகளுக்கு ரெகாட்டா என்று பெயர். படகுகளில் பலவகைகள் இருக்கின்றன. அதில் ரெகாட்டா என்பது தனி நபராகவோ அல்லது குழுவாகவோ துடுப்புகளால் செலுத்தும் படகுப் போட்டிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
கூடுதல் விவரங்களுக்கு மெட்ராஸ் போட் கிளப் அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும். தொலைபேசி: +91.44.2435.4751