செய்திகள்

ஆசான் நினைவு கலை கல்லூரியில் 250 மாணவர்கள் ரத்த தானம்

சென்னை, ஜன. 31–

பள்ளிக்கரணை அருகில் உள்ள ஆசான் நினைவு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டுநலப் பணித்திட்டம் செஞ்சுருள் சங்கம் இளம் செஞ்சிலுவைச் சங்கம் ஆகிய அமைப்புகளின் சார்பில் ரத்த தான முகாம் நடைபெற்றது. இம்முகாமில் ஆசான் கல்லூரி பேராசிரியர்கள், அலுவலர்கள், மாணவர்கள் 250 பேர் கலந்துகொண்டு 250 யூனிட் ரத்தம் தானமாக வழங்கினர்.

இம்முகாமிற்குச் சென்னைப் பல்கலைக்கழக ஆட்சிமன்றத்தின் குழு உறுப்பினரும் கல்லூரியின் முதல்வருமான ராமநாதன் தலைமை தாங்கினார். சென்னைப் பல்கலைக்கழகத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் கோ. பாஸ்கரன், காஞ்சிபுர மாவட்ட செஞ்சிலுவைச் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ரா.மாணிக்கம், இந்திய செஞ்சிலுவைச் சங்கத்தின் ரத்த வங்கி அதிகாரி ஆர்.சந்திரா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். பொன் ரமேஷ்குமார், இ.அருள்பாண்டி, யோ. பியூலா ஜெப ஜெயா ஆகியோர் உடன் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *